பெரு நாட்டில் லாரி மோதி.. பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து! 37 பேர் பலி.. ஷாக் வீடியோ
லிமா: பெருவின் அரிக்கீபா பகுதியில், பஸ் ஒன்று லாரியுடன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலையில் நடந்த இந்த விபத்து, தென் அமெரிக்க நாடுகளில் சமீப ஆண்டுகளில் நடந்த மோசமான விபத்துகளில் ஒன்றாக இருக்கிறது.
பெருவையும் சிலியையும் இணைக்கும் பனமெரிகானா சூர் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. விபத்து நடந்த பகுதியின் மருத்துவ அதிகாரி வால்டர் ஓபோர்ட்டோ இது குறித்து கூறுகையில், "37 பேர் உயிரிழந்துள்ளனர், 24 பேர் காயமடைந்துள்ளனர்" என AFP செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

லியாமோசாஸ் எனும் நிறுவனத்தின் பஸ், 60 பயணிகளுடன், காரவேலி மாகாணத்தின் சலா நகரில் இருந்து அரிக்கீபா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியுடன் மோதி சுமார் 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
WATCH: At least 37 killed, 18 injured after bus plunges into ravine in Arequipa region, southern Peru pic.twitter.com/k8x1kVG5Hv
— Rapid Report (@RapidReport2025) November 12, 2025
அரிக்கீபா அதிகாரிகள் தங்களது சமூக வலைதள பக்கத்தில், 26 பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதிவேகம், மோசமான சாலைகள், சிக்னல் இல்லாதது மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு ஆகியவை பெருவில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்க முக்கிய காரணங்களாக உள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications