57 வயதில் வந்த ஆசை.. முதல் காதலனால் 1.6 கோடி காலி.. 2வது காதலனால் 2.5 கோடி போச்சு
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் காதலனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய 57 வயது பெண், ஆன்லைன் மோசடி செய்பவர்களிடம் சுமார் 4.3 கோடி ரூபாயை இழந்துள்ளார். 2018ல் விவாகரத்து ஆன நிலையில் நல்ல துணையை தேடிய அந்த பெண், டேட்டிங் ஆப்பில் தேடிய போது ஒருவரை காதலித்துள்ளார். அவரிடம் பணத்தை பறிகொடுத்தார். இன்னொருவரிடம் வீட்டை இழந்துள்ளார். என்ன நடந்தது எப்படி ஏமாற்றினார்கள் என்று பார்ப்போம்.
ஆன்லைனில் காதலைத் தேடுவது என்பது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதற்கு இந்த நிகழ்வு உதாரணமாகும். நேரில் பார்க்காமல், அழகாக இருக்கிறார் என்று மட்டும் நினைத்து பழகுவது கடையில் பணத்தை தொலைத்து, வாழ்க்கையை தொலைக்கும் நிலைக்கு தள்ளும். அப்படித்தான் ஆஸ்திரேலியாவின் அன்னெட் என்பருக்கு நடந்துள்ளது. நல்ல காதலனை தேடியவர் அதற்காக ₹4.2 கோடியை இழந்துள்ளார்.

57 வயதான அன்னெட் என்ற பெண்ணுக்கு 33 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இனிமையாக சென்ற திருமண வாழ்க்கை, 2018ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. கணவனை அன்னெட் விவாகரத்து செய்தார். அதன்பிறகு தனிமையை உணர்ந்த அன்னெட் , டேட்டிங் தளமான ப்ளெண்டி ஆஃப் ஃபிஷில் சேர்ந்தார். பணம்,பொருள் எல்லாவற்றையும் அவரது முன்னாள் கணவரே நிர்வகித்து வந்ததால் அன்னெட்டுக்கு நிதியை எப்படி கையாள்வது என்பதே தெரியவில்லை.. ஆன்லைன் டேட்டிங் ஆப்பில் தனது கணவரை போல் ஒருவர் கிடைப்பாரா என்று தேடியுள்ளார். ஆனால் அவரை இரண்டு பேர் ஏமாற்றியுள்ளார்கள்.
முதல் நபரின் பெயர் 'வில்லியம்'.இவர் மலேசியாவின் கோலாலம்பூரில் தன்னிடம் சிலர் பணத்தை கொள்ளையடித்ததாகவும், தனது பணப்பையையும் கிரெடிட் கார்டுகளையும் சிலர் பறித்துவிட்டதாக கூறியுள்ளார். பல மாதங்கள் நம்பிக்கையை வளர்த்து பழகியுள்ளார் வில்லியம். அன்னிட்டை காதலிப்பதாக நடித்த வில்லியம், அவரிடம் படிப்படியாக பணத்தை கறக்க தொடங்கினார். மருத்துவமனை பில் மற்றும் ஹோட்டல் பில்கள் மற்றும் அவரது கட்டுமான தளத்தில் தொழிலாளர்களுக்கு அலவன்ஸ் உட்பட பல்வேறு செலவுகளை ஈடுகட்ட அன்னெட்டிடம் $5,000 (₹2.7 லட்சம்) கேட்டார். அன்னட்டும் பணம் தந்துள்ளார். ஆனால் அடிக்கடி பணத்தை இப்படி பறித்துள்ளார்.சுமார் $300,000 (₹1.6 கோடி) பணத்தை அன்னட் வில்லியமுக்கு அனுப்பியுள்ளார்.இறுதியாக பென்சன் பணத்தையும் காதலன் மீது பைத்தியம் பிடித்து அதையும் வீணாக்கினார். எல்லாம் தொலைந்த பின்னர், ஏமாந்து நின்ற அன்னட், ஆஸ்திரேலிய காவல்துறையிடம் புகாரளித்தார். ஆனால் அன்னெட்டுக்கு எந்த பலனும் இல்லை..
இதனிடையே நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2022ம் ஆண்டு, ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த நெல்சன் என்பவர், எப்பிஐஇல் வேலை செய்வதாக கூறி அறிமுகம் ஆகியுள்ளார். நன்கு பழகிய பின்னர். பணம் அனுப்புமாறு நெல்சன் கோரியுள்ளார். ஆரம்பத்தில் அதை நம்பி பணம் அனுப்ப மறுத்தார் அன்னெட்.. பின்னர் ஒரு பிட்காயின் ஏடிஎம்மில் நிதியை டெபாசிட் செய்தார்.அதைவைத்து நெல்சன் மோசடி செய்து கிட்டத்தட்ட $280,000 (₹2.5 கோடி) பறித்துள்ளார். தனது வீடு, பணம் என எல்லாவற்றையும் இழந்தார்.அன்னெட் இப்போது ஏழையாக மாறி வாழ்க்கையே திசை மாறி நொறுங்கி கிடக்கிறார். டேட்டிங் ஆப்பில் காதலை தேடி பணத்தை தொலைக்க வேண்டாம் என ஆஸ்திரேலியர்களை எச்சரித்து வருகிறார்.
பணம் வரும் வரை உங்களை பயன்படுத்திவிட்டு. அவர்கள் உங்களைத் தூக்கி எறிந்துவிடுவார்கள்... அப்போது ஒரு முட்டாள் போல் உணர வேண்டிய நிலை வரும். எனவே நீங்கள் இதுவரை சந்திக்காத ஒருவருக்கு அந்தப் பணத்தை அனுப்புவதற்கு முன்பு நீங்கள் எப்படி கஷ்டப்பட்டு உழைத்து அந்த பணத்தை சேர்த்தீர்கள் என்பதை யோசித்து பாருங்கள் என அன்னெட் அட்வைஸ் செய்து வருகிறார்.
2023 ஆம் ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலியாவில் 3,200 க்கும் மேற்பட்ட காதல் மோசடிகள் பதிவாகியுள்ளன. இதனால் ஏற்பட்ட இழப்புகள் மட்டும ₹130 கோடியை நெருங்கின. AI மூலம் இயங்கும் டீப்ஃபேக் தொழில்நுட்பம் என்பது மோசடிகளை இன்னும் நம்பத்தகுந்ததாக ஆக்குவதால், எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications