பிச்சை எடுக்கவே சவூதி உள்பட வெளிநாடுகளுக்கு பயணம்! பாகிஸ்தான் நிலைமை இதுதான்.. நாடு கடத்தும் அரசுகள்
இஸ்லாமாபாத்: பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் இருந்து பிச்சை எடுப்பதற்காகவே ஏராளமானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதும், அதன்பிறகு வெளிநாடுகளில் இருந்து அவர்கள் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 2024 முதல் இப்போது வரை மொத்தம் எத்தனை பிச்சைக்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பதும், எந்த நாட்டில் இருந்து அதிகமானவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது பற்றி பாகிஸ்தானின் உள்விவகாரத்துறை அமைச்சர் சையத் மோஷின் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளது. அதேபோல் நமக்கு சொந்தமான காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர்.

இதற்கு கடந்த 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இதில் 9 பயங்கரவாதிகளின் முகாம்கள், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. நம்மை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அதன்பிறகு பாகிஸ்தான் கெஞ்சிய நிலையில் போர் நிறுத்தத்துக்கு நம் நாடு சம்மதம் தெரிவித்தது.
இதற்கிடையே தான் பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இப்படியான சூழலில் இந்தியாவுடன் மோதல் என்பது தேவையா? என்ற கேள்விகள் எழுந்தன. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் மக்களில் பலரும் ஏழ்மை நிலையில் உள்ளனர். இதனால் மோதலை கைவிட்டுவிட்டு ஏழ்மையில் உள்ள சொந்த மக்களை முன்னேற்ற பாகிஸ்தான் திட்டம் தீட்ட வேண்டும் என்று பலரும் கூறிவருகின்றனர்.
இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வெளிநாடுகளில் பாகிஸ்தானியர்கள் அதிகளவில் பிச்சை எடுப்பதும், அவர்களை அந்தந்த நாடுகள் கண்டுபிடித்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவது தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் உள்விவகாரத்தறை (Interior Minister)அமைச்சர் சையத் மோஷின் ராசா நக்வி கூறியதாவது: கடந்த 2024ம் ஆண்டு முதல் இப்போது வரை வெளிநாடுகளில் பிச்சை எடுத்ததாக மொத்தம் 5,402 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சவூதி அரேபியா, ஈராக், மலேசியா, ஓமன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதில் அதிகமானவர்கள் சவூதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்துமட்டும் 5,033 பேர் நாடு கடத்தி வரப்பட்டுள்ளனர். கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் சவூதிஅரேபியாவில் இருந்து 4,850 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருந்து அதிகமானவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவில் இருந்து சிந்து மாகாணத்தை சேர்ந்த 2,428 பேர் நாடு கடத்தி வரப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 1098 பேர், கைபர் பக்துன்வா மாகாணத்தை சேர்ந்த 819 பேர், பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 117 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்'' என்றார்.
அதாவது சவூதி அரேபியா இஸ்லாம் மதத்தின் புனித இடமாக உள்ளது. இதனால் அதிகமானவர்கள் அங்கு செல்கின்றனர். இவர்கள் இஸ்லாம் மதத்தின் புனித இடமாக உள்ள மெக்கா மற்றும் மதினா உள்ளிட்ட நகரங்களில் ஹஜ் மற்றும் உம்ராவிற்கு செல்வோரிடம் யாசகம் கோருகின்றனர். பாகிஸ்தானியர்கள் உள்பட யாரும் பிச்சை எடுப்பதை சவூதி அரேபியா விரும்புவது இல்லை. இதனால் பிச்சைக்காரர்களை அடையாளம் கண்டு அவர்களின் சொந்த நாட்டுக்கு சவூதி அரேபியா நாடு கடத்தி வருகிறது.
பாகிஸ்தானை பொருத்தமட்டில் வேலைவாய்ப்பு என்பது இல்லை. பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. மக்கள் கைகளில் பணம் இல்லை. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு தரப்பு மக்கள் உணவுக்கே சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் சவூதி அரேபியா, ஈராக், மலேசியா, ஓமன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கின்றனர். இப்படி நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.8,500 கோடி வரை கடன் பெற சில நாட்களுக்கு முன்பு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க ஒப்புதல் வழங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications