வாட்ஸ் ஆப்... நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய 5 அம்சங்கள்...!
சிலிக்கான் வேலி: கிட்டத்தட்ட ரூ 1 லட்சம் கோடி அளவுக்கு பேஸ்புக்கால் விலைக்கு வாங்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் சுவாரஸ்யமான பக்கங்கள் குறித்த செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.
உலக மகா விற்பனை நடந்து சில நாட்களுக்குள்ளாகவே வாட்ஸ் ஆப் சேவை திடீரென உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு அந்த நிறுவனத்தை நெளிய வைத்த போதிலும் கூட வாட்ஸ் ஆப் இன்னும் ஸ்டிராங்காகத்தான் இருக்கிறது.
இங்கு வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் ஐந்து முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்...

நடப்பு மதிப்பு
வாட்ஸ் ஆப் நிறுவனத்தை இந்தக் கணக்கின் அடிப்படையில்தான் தற்போது பேஸ்புக் வாங்கியு்ளது. அதாவது ரொக்கமாக ரூ. 24 ஆயிரத்து 852 கோடி கொடுக்கிறது. பங்குகளாக ரூ. 74 ஆயிரத்து 556 கோடியைக் கொடுக்கிறது. இது போக ஊழியர்களிடம் ரூ. 18,639 கோடி மதிப்பிலான பங்குகளைக் கொடுக்கிறது. இப்படித்தான் மொத்த வியாபாரத்தையும் அது முடித்துள்ளது.

யார் யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்
வாட்ஸ் ஆப்பை உலகம் முழுவதும் 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள். டிவிட்டரை 250 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். பேஸ்புக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1.2 பில்லியன் பேர் ஆவர்.

ஊழியர்கள் ஜஸ்ட் 55 பேர்தான்
450 மில்லியன் பேர் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தினாலும் அதன் அலுவலக ஊழியர்களின் பலம் எவ்வளவு தெரியுமா.. ஜஸ்ட் 55 பேர்தானாம். டிவிட்டரில் 2300 பேர் பணியாற்றுகிறார்கள். பேஸ்புக்கில் 6337 பேர் உள்ளனர்.

பெரிய்ய்ய டீல் இதுதான்
இதற்கு முன்பு பேஸ்புக் நிறுவனம் 2012ம் ஆண்டு இன்ஸ்டாகிராமை 1 பில்லியன் டாலருக்கு வாங்கியது. அதே போல மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்பை 8.5 பில்லியன் டாலருக்கு வாங்கியதே பெரிய வர்த்தகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளைக்கு எத்தனை...
வாட்ஸ் ஆப் மூலம் ஒரு நாளைக்கு 50 பில்லின் மெசேஜ்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றனவாம். அதேபோல 600 மில்லியன் போட்டோக்களை அனுப்புகிறார்கள். 100 மில்லியன் வீடியோக்ள் போய்க் கொண்டுள்ளன.

ஒரு நாளைக்கு 10 லட்சம் பேர்
இது போக ஒரு நாளைக்கு தோராயமாக 10 லட்சம் பேர் இதில் இணைந்தபடி உள்ளனராம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications