கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 5 பேருக்கு கத்திக்குத்து - தாக்குதல் நடத்திய மாணவர் சுட்டுக்கொலை
மெர்சட், கலிபோர்னியா: கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வகுப்பறைக்குள் அதிரடியாக நுழைந்து மாணவர் ஒருவர் உட்பட ஐந்து பேரை கத்தியால் குத்திய 20 வயது மாணவரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்திய நேரப்படி இது நேற்றிரவு ஆகும்.

போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த 20 வயது மாணவர் கல்லூரியின் இரண்டாவது மாடியில் உள்ள வகுப்பறைக்குள் அதிரடியாக நுழைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். முதலில் குறிப்பிட்ட மாணவர் ஒருவரை அவர் கத்தியால் குத்தியுள்ளார். இதனைப் பார்த்து அருகில் இருந்த மாணவர்களும், பக்கத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 31 வயது தொழிலாளர் ஒருவரும் முயன்றுள்ளனர். இதனால் அவர்களையும் கத்தியால் அம்மாணவர் குத்தியுள்ளார்.
கத்திக்குத்து தாக்குதல் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்கலைக்கழக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தாக்குதல் நடத்திய மாணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
காயமடைந்தவர்களில் இருவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலும், மேலும் இருவர் வேறு ஒரு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த கட்டுமான ஊழியர் சிகிச்சைக்குப் பின் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் பயிலும் சுமார் 6 ஆயிரம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. சுட்டுக் கொல்லப்பட்ட மாணவரின் விபரங்களையும் போலீசார் வெளியிட மறுத்து விட்டனர்.
காலை 8 மணியளவில் நடந்த இந்த சம்பவங்களால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications