கோவில் கட்ட நிலம் அளிக்கும் அபுதாபி பட்டத்து இளவரசருக்கு மரியாதை செய்த இந்தியர்கள்
துபாய்: அபுதாபியில் கோவில் கட்ட நிலம் வழங்கும் அமீரக அரசுக்கு துபாயில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கூடியிருந்த 50 ஆயிரம் இந்தியர்கள் எழுந்து நின்று கைதட்டி நன்றி தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் அபுதாபி சென்ற அவருக்கு அரசு சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் துபாய் சென்றார்.

துபாயில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அவர் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொண்டனர். அபுதாபியில் கோவில் கட்ட நிலம் வழங்க முடிவு செய்துள்ள பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யானுக்கு எழுந்து நின்று மரியாதை செய்யுமாறு மோடி தெரிவித்தார்.
அப்போது மோடி கூறுகையில்,
கோவில் கட்ட நிலம் வழங்கும் பட்டத்து இளவரசர், அமீரகம் மற்றும் துபாய் ஆட்சியாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதத்தின் பெயரால் தீவிரவாதம் அதிகரித்து வரும் நிலையில் அபுதாபியில் கோவில் கட்ட பட்டத்து இளவரசர் நிலம் அளிக்கிறார். அனைத்து இந்தியர்களும் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைவரும் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கைதட்டுங்கள் என்றார்.

இதையடுத்து அரங்கில் இருந்த இந்தியர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கைதட்டி பட்டத்து இளவரசருக்கு நன்றி செலுத்தினர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications