50 பேரின் உயிரை குடித்த ஆறு..எமனாக மாறிய படகு பயணம்.. பெரும் சோகத்தில் ஆப்பிரிகா
பாங்கி: மத்திய ஆப்பிரிக்கா நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய ஆப்பிரிக்கா நாட்டின் தலைநகரான பாங்கியில் எம்போகோ ஆறு பாய்கிறது. பாங்கி மக்கள் இந்த ஆற்றை கடந்துதான் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியும். எனவே இங்கு படகு போக்குவரத்து பரவலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இறுதி சடங்கு நிகழ்ச்சிக்காக பாங்கியிலிருந்து படகில் சுமார் 300 மக்கள் ஆற்றை கடக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது.

படகிலிருந்த பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என பலரும் உயிருக்கு போராடியுள்ளனர். நிலைமையை உணர்ந்த உள்ளூர் மீனவர்கள் தங்கள் படகுகள் மூலம் மீட்பு பணியை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக 20 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில்,
“நாங்கள் விபத்து நடந்த இடத்திற்கு போவதற்கு முன்னரே பெரும்பாலானோர்கள் உயிரிழந்துவிட்டனர். எங்களால் சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது. விவரம் ராணுவத்திற்கு தெரிவிக்கப்பட்டு, சிறிது நேரம் கழித்து ராணுவம் வந்தது. அவர்கள் மீட்பு பணியை துரிதப்படுத்தியுள்ளனர். நாங்கள் இப்போது வரை 20 பேரின் சடலங்களை மீட்டிருக்கிறோம். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இது ஒரு மோசமான நாள்” என்று கூறியுள்ளார்.

விபத்து நடந்து 40 நிமிடங்களுக்கு பின்னரே மீட்பு படையினர் வந்ததாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அந்நாட்டு அரசு நிவாரண உதவியை அறிவித்திருக்கிறது. படகில் சென்றவர்களில் பெரும்பாலானவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியாததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதே விபத்திற்கு முக்கிய காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். படகில் அதிகபட்சமாக 80-100 பேர் மட்டுமே வரை பயணிக்க முடியும். ஆனால், விபத்து நடந்த படகில் 300 பேர் வரை பயணித்துள்ளனர். மறுபுறம் படகில் பயணிகள் ஒழுங்கற்ற முறையில் அமர்ந்திருந்ததால் படகு கவிழ்ந்திருக்கிறது என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications