ஜப்பானில் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி வார்னிங் இல்லை!!
டோக்கியோ: ஜப்பான் கடலுக்கடியில் 6.8 ரிக்டர் அளவுகொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
கடந்த சில வாரங்களாக உலகை பீதிக்குள்ளாக்கும் வகையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேபாளத்தை நிலைகுலைய வைத்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது.

இந்நிலையில் இந்தியா, சீனா, நேபாளம், ஆப்கான் உள்ளிட்ட நாடுகளின் 82 இடங்களில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் நேபாளம், இந்தியாவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்நிலையில் ஜப்பானிற்கு வடகிழக்கே கடற்பகுதியில் 6.8 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது. சக்திவாய்ந்த இந்நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தான உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. ஹோன்சு தீவு அருகே கடற்பகுதியில், 38.9 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அலைகள் தாக்கியது. இச்சம்பவத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். புகுஷிமா அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டு கதிரியக்க கசிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications