For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹவாய் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மேலும் ஒரு எரிமலை சீற்றம்.. மக்கள் வெளியேற்றம்

ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மேலும் ஒரு எரிமலை சீறத் தொடங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹவாய் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-வீடியோ

    நியூயார்க்: ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மேலும் ஒரு எரிமலை சீறத் தொடங்கியுள்ளது.

    அமெரிக்காவின் ஹவாய் தீவில் மக்கள் குடியிருக்கும் பகுதி அருகே உள்ள கீலவேயா எரிமலையில் சீற்றம் ஏற்பட்டு இருந்தது. சமீப காலமாக ஹவாய் தீவில் ஏற்பட்டு வந்த நில நடுக்கங்களின் எதிரொலியாகத்தான் இந்த எரிமலையில் சீற்றம் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.

    எரிமலை, குழம்பினை கக்கி வருகிறது. இதை அடுத்து அந்தப் பகுதியில் வசித்து வருகிற மக்கள் கட்டாயமாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    மக்கள் வெளியேற்றம்

    மக்கள் வெளியேற்றம்

    இதையடுத்து அங்கு இருந்து 1,500 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்காக அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் முகாம்களை அமைத்து உள்ளது.

    150 அடி உயரத்துக்கு நெருப்பு குழம்பு

    150 அடி உயரத்துக்கு நெருப்பு குழம்பு

    எரிமலை சீற்றத்தின் காரணமாக சாலையை பிளந்து கொண்டு, நெருப்பு குழம்பு பீறிட்டது. எரிமலை குழம்பானது 150 அடி உயரத்துக்கு பீறிட்டு, 183 மீட்டர் சுற்றளவுக்கு பரவுவதாக தகவல்கள் கூறப்படுகிறது.

    சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    எரிமலை சீற்றத்தின் காரணமாக அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் அங்குள்ள ஹாவாலி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    மக்கள் அச்சம்

    மக்கள் அச்சம்

    ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கத்தால், மேலும், ஒரு இடத்தில் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    English summary
    6.9 magnitude earthquake hits Hawaii island. Powerful earthquack hits Hawaii continuesly valcano erupts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X