சைக்கிள் ஓட்டும்போது.. ஃபோன் பேசினால்.. 6 மாசம் ஜெயில்.. எந்த நாட்டில் தெரியுமா?
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் சைக்கிள் ஓட்டும் போது செல்போனில் பேசினாலோ, அல்லது இணையதளத்தைப் பயன்படுத்தினாலோ 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பயன்படுத்தும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நண்பர்கள், உறவினர்களிடம் பேசிக் கொண்டே வாகனங்களை இயக்குவது, ஹெட்போன்களில் பாட்டு கேட்டுக் கொண்டே வாகனம் ஓட்டுவது, சிலர் இன்னும் ஒருபடி மேல் சென்று ரீல்ஸ் செய்வது, நாடகங்களைப் பார்த்துக் கொண்டே எல்லாம் வாகனங்களை இயக்குகின்றனர்.

ஒரு நொடி கவனச் சிதறல் உயிரையே காவு வாங்கும் என்பதை அறிந்திருந்தும் இதுபோன்ற அலட்சியமான காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. வாகனம் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அபராதங்களும் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும், வாகனங்களை ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது தொடர் கதையாகத்தான் உள்ளது. இந்நிலையில், சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினாலோ, அல்லது இணையத்தை பயன்படுத்தினாலோ 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் சைக்கிளிலேயே தங்களது போக்குவரத்தை மேற்கொள்கின்றனர். அலுவலகம், பள்ளி, கல்லூரி என எங்கு சென்றாலும் அங்குள்ள மக்கள் சைக்கிளிலேயே சென்று வருகின்றனர். இந்நிலையில், ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது கடந்த சில நாள்களாக சாலை விபத்துகளும் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சைக்கிள் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஏற்படும் மற்ற வாகனங்களில் மூலம் ஏற்படும் விபத்துகளை ஒப்பிடும்போது இது 20 சதவீதம் ஆகும். இந்நிலையில், பொதுமக்கள் சைக்கிளில் செல்லும்போது ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் விபத்துக்களை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், என்ன காரணத்தால் தொடர்ந்து விபத்து அதிகரித்து வருகிறது என்பது குறித்தும் அரசு சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சைக்கிள் ஓட்டும்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பயன்படுத்துவதால் கவனச் சிதறல் காரணமாக விபத்துகள் அதிகமாக நேரிடுவது தெபியவந்துள்ளது.
இதையடுத்து, ஜப்பானில் போக்குவரத்து விதிகளில் உடனடியாக புதிய திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பான் மக்கள் சைக்கிள் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தக் கூடாது. செல்போனில் பேசவோ அல்லது இன்டர்நெட்டைப் பயன்படுத்தினாலோ 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். அல்லது 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
அதேபோல, மது அருந்திவிட்டு சைக்கிளை ஓட்டினால் மூன்று ஆண்டுகல் சிறை தண்டனை விதிக்கப்படும். அல்லது இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடியாக போக்குவரத்து விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications