காபூல் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: 80 பேர் பலி; 230 பேர் படுகாயம் - ஐஎஸ் பொறுப்பேற்பு
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் இரண்டு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 80 பேர் பலியாகி இருப்பதாகவும், 230 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரும், உள்துறை அமைச்சக அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். காபூலில் நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தெஹ மஸங் சதுக்கத்தில் ஹசாரா சிறுபான்மையினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வழிப்பாதை திட்டத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஹசாரா சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
அமைதியாக நடைபெற்ற இந்த போராட்டதின் போது, அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஐ.எஸ் தாக்குதல்
மின்சார வழித்தடத்தை மாற்றக் கோரி ஹசாரா சிறுபான்மை இன மக்கள் இன்று காலை முதல் தெமாஸாங் சர்கிள் என்ற இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தற்கொலைப் படையினர் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

80 பேர் பலி
படுகாயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலை, தற்கொலைப்படை தீவிரவாதிகள் சுமார் மூன்று பேர் நிகழ்த்தியதாக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

தீவிரவாத தாக்குதல்
இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என தலிபான்கள் மறுத்துள்ள நிலையில், இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தகவலை அமாக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய நாடுகள்
ஐஎஸ் தீவிரவாதிகள் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகளில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தி வருகிறது. புனித ரமலான் மாதத்தில் மட்டும் இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர்.

இஸ்தான்புல் தாக்குதல்
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 36 பேர் பலியாகினர். இதேபோல வங்கதேச தலைநகர் டாக்காவில் நடத்திய தாக்குதலில் 20 வெளிநாட்டினர் பலியாகினர்.

கார் குண்டு வெடிப்பு
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐஎஸ் தீவிரவாதிகள் இரண்டு இடங்களில் நடத்திய பயங்கர கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 200 பேர் வரை பலியாகினர்.

காபூல் தாக்குதல்
இன்று ஆப்கான் தலைநகர் காபூலில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்த்தியதில் 80 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications