செவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் தேர்வு
லண்டன்: செவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உள்பட 1,058 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்தைச் சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் மக்கள் குடியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இதையடுத்து 140 நாடுகளில் இருந்து 20,000 இந்தியர்கள் உள்பட சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவற்றில் 62 இந்தியர்கள் உள்பட 1,058 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

"நல்ல உடல்நலம், மன உறுதியுடன் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்ப முடியாது. அங்கேயே மக்கள் வாழத் தகுந்த குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு தங்க வைக்கப்படுவர்," என்று மார்ஸ் ஒன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்தப் பயணம் 2024-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன் செவ்வாய் கிரகத்துக்கு செல்லவிருக்கும் நபர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் தரவிருக்கிறது இந்த நிறுவனம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications