ஜப்பானில் நிலநடுக்கம்..... சீறிய சுனாமி அலைகள்! அணு உலைக்கு பாதிப்பில்லை!!

Subscribe to Oneindia Tamil

7.3 magnitude quake rocks Japan; no damage reported
டோக்கியோ: ஜப்பான் கடற்பரப்பில் நேற்றிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந் நிலநடுக்கத்தால் டோக்கியோ, மியாகி ஆகிய கடற்கரை நகரங்களில் ஓரடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்து ஆர்ப்பரித்தன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துபோயினர்.

ஜப்பானின் கிழக்கு கடற்கரை நகரமான ஹோன்சு அருகே இந்திய நேரப்படி நேற்று இரவு 10.40 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அணுமின்நிலையம் பாதிப்புக்குள்ளான புகுஷிமா உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அணு உலையில் இருந்து பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலைகள் சீறிப் பாய்ந்தன. ஆனால் சிறிய சுனாமி அலைகளாக இருந்ததால் அணு உலைக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முதலில் நிலநடுக்கத்தை உறுதி செய்ததையடுத்து ஜப்பான் வானிலை நிறுவனமும் உறுதி செய்தது. இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகளால் உயிர்ச் சேதமோ,பொருட் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானில் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது உருவான மிகப்பெரிய சுனாமியினால் புகுஷிமா நகரில் உள்ள அணு உலைகள் பாதிக்கப்பட்டன. இதில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+