பயங்கர நிலநடுக்கம்: பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்டோர் பலி; 1,500 பேர் படுகாயம்!
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலநடுக்கத்தில் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியில் 102 கி.மீ ஆழத்தில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி இருந்தது.

இதனால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பொதுமக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
காபூல் உள்ளிட்ட ஆப்கான் நகரங்களில் மின்சாரமும் தொலைபேசி சேவையும் முற்றாக துண்டிக்கப்பட்டன. இதேபோல் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி பெசாவர் உள்ளிட்ட பல நகரங்களிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
தற்போதைய தகவல்களின்படி பாகிஸ்தானின் பல நகரங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கட்டிடங்கள் இடிந்தும் மேற்கூரைகள் சரிந்தும் நிலச்சரிவு ஏற்பட்டும் நெரிசலில் சிக்கியும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 1,500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 12 பள்ளி மாணவிகள் உட்பட 50 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலநடுக்கத்தால் இந்தியாவின் ஸ்ரீநகர், சண்டிகர், சிம்லா, டெல்லி ஆகிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
பல லட்சம் பேரை பலி கொண்ட இந்துகுஷ் மலைப்பகுதியின் பயங்கர நிலநடுக்கங்கள்..
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications