இதயத்தில் ஓட்டை.. ஜோர்டானில் சிகிச்சை முடித்து காசாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 7 மாத குழந்தை!

Subscribe to Oneindia Tamil

காசா: இதயத்தில் ஓட்டையுடன் உயிருக்கு போராடி வந்த காசாவை சேர்ந்த 7 மாத பச்சிளம் குழந்தைக்கு ஜோர்டானில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அக்குழந்தை மீண்டும் காசாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது.

காசாவில் போர் காரணமாக தினம் தினம் மக்கள் செத்து வருகின்றனர். இப்படி இருக்கையில், போர் பகுதிக்கு பச்சிளம் குழந்தையை ஏன் திருப்பி அனுப்ப வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Gaza Jordan Israel

காசா பகுதியின் வடக்கே உள்ள அல்-ஷாதி அகதிகள் முகாமில் உள்ள ஒரு தற்காலிக கூடாரத்தில், 33 வயதான எனாஸ் அபு டாக்கா எனும் பெண் வசித்து வருகிறார். இவரது 7 மாத குழந்தைக்கு இதய பிரச்சனை இருந்தது. போர் இக்குழந்தையின் உடல் நலனை கடுமையாக பாதித்தது. ஒவ்வொரு நாளும் போதுமான மருத்துவ வசதி இல்லாமல், குழந்தை உயிருக்கு போராடி வந்தது. காசாவில் உள்ள மருத்து வசதிகளை கொண்டு குழந்தைக்கு நிச்சயம் சிகிச்சை அளிக்க முடியாது.

இப்படி இருக்கையில்தான் காசாவில் உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்தை ஜோர்டான் நாட்டு அரசு அறிவித்தது. மொத்தம் 2,000 நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஜோர்டன் அரசு முன் வந்திருந்தது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் குழந்தையுடன் தாய் எனாஸ் மற்றும் அவரது சகோதரி என மூவரும் ஜோர்டானுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

போர் நிறுத்த சமயம் என்பதால், மொத்தம் 29 குழந்தைகள் சிகிச்சைக்காக ஜோர்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். எனாஸின் 7 மாத குழந்தைக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி நடந்திருக்கிறது. பின்னர் தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை ஓரளவுக்கு உடல் நலம் தேறியதையடுத்து தற்போது மீண்டும் காசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் செயற்பாட்டாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் தாய் எனாஸ் கூறுகையில், "என் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இப்போது மீண்டும் போர் சூழலுக்கு அனுப்பியுள்ளார்கள். நாங்கள் இங்கிருந்து வெளியேறியபோது போர் நடக்கவில்லை. ஆனால் போர் நடக்கும்போது எங்களை இங்கே வலுக்கட்டாயமாக அனுப்பியிருக்கிறார்கள். குழந்தைக்கான சிகிச்சை இன்னும் முழுமையாக முடியவில்லை. போர் காரணமாக தினமும் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறது" என்று கூறியிருக்கிறார்.

ஆனால் ஜோர்டன் அதிகாரிகள் கூறுகையில், "எங்களுக்கான ஒப்பந்தம் 2000 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதுதான். காசா மக்களை அவர்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவது ஒப்பந்தத்தில் இல்லை. அவர்கள், அவர்களுடைய மண்ணிலேயே தங்க வைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இங்கு நிரந்தரமாக அவர்களை இருக்க வைக்க முடியாது" என்று கூறியுள்ளார். மட்டுமல்லாது, இந்த 29 குழந்தைகள் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர்தான் அடுத்த குழுவில் உள்ள 17 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஜோர்டான் முன்வந்திருக்கிறது.

எனாஸ் உடன், சென்றிருந்த மற்ற குழந்தைகளின் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கான சிகிச்சை முழுமையடையவில்லை என்றும், முழுமையான சிகிச்சைக்கு முன்னரே காசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தவறு என்றும் வாதிடுகின்றனர்.

காசாவில் போர் காரணமாக சுமார் 60,000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். சமீபத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கைவிடப்பட்டு போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+