மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு... 70 பேர் பலி - 100 பேரைக் காணவில்லை
யங்கூன்: மியான்மர் நாட்டு சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மியான்மரில் உள்ளது ‘ஜேட்' சுரங்கம். அப்பகுதி கிராமவாசிகளே சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 70 பேர் பலியாகினர் என்றும் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆபரணங்கள் தயாரிக்க பயன்படும் ‘ஜேட்' கற்கள் உலகில் இப்பகுதியில் தான் அதிகமாக கிடைக்கிறது. இதனால் பில்லியன் டாலர்கள் மதிப்பில் வருமானம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications