துருக்கியில் அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட 1,500 ராணுவ வீரர்கள் கைது- 5 தளபதிகள் சஸ்பென்ட்
அங்காரா: துருக்கியில் அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டதாக 1,500 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 ராணுவ தளபதிகள், 20 கர்னல்கள் பதவிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் கிழக்கு எர்ஜின்கான் மாகாணத்தின் ராணுவ தளபதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
துருக்கியில் அதிபர் எர்டோகன் அரசை கவிழ்த்து விட்டு ராணுவ ஆட்சி திடீரென பிரகடனம் செய்யப்பட்டது. அதிபர் மாளிகை, நாடாளுமன்றம் மீது துருக்கி ராணுவத்தின் ஒரு பிரிவினர் சரமாரி தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதல்களுக்கு துருக்கி போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இம்மோதலில் 17 போலீசார் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகினர். இதனிடையே ராணுவப் புரட்சியை முறியடித்துவிட்டதாகவும் அரசாங்கம் தங்களது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதே கருத்தை அதிபர் எர்டோகனும் கூறி வருகிறார். துருக்கி ராணுவத்தின் ஒரு பிரிவினர் எர்டோகனுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
754 Turkish army personnel linked to coup attempt detained pic.twitter.com/NyMDjl3yzU
— ANADOLU AGENCY (ENG) (@anadoluagency) July 16, 2016
மேலும் இதுவரை அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டதாக 1500 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு எர்ஜின்கான் மாகாணத்தின் ராணுவ தளபதி எக்ரெம் காக்லரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் புரட்சியில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் போலீசிடம் சரணடைந்து வருகின்றனர். துருக்கியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications