மனிதர்களுக்கு பரவ அதிக வாய்ப்பு.. கொரோனா போல் 8 புதிய வைரஸ் கண்டுபிடிப்பு! பகீர் கிளப்பும் சீனா
பெய்ஜிங்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் ஒட்டுமொத்த உலகத்தையுமே முடக்கிப்போட்டது. இந்நிலையில் தான் சீனாவில் தற்போது புதிய 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ்கள் மனிதர்ளை தாக்கும் தன்மை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனாவில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன்பிறகு அடுத்தடுத்து பிற நாடுகளுக்கு அந்த வைரஸ் பரவியது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் என்பது தீவிரமாக பரவியது.

இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர். மேலும் மாநிலங்கள், நாடுகள் இடையேயான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டன. இறுதியாக முறையான பாதுகாப்பு நடவடிக்கைள் மற்றும் கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவற்றால் அந்த வைரஸ் பரவல் குறைந்தது.
2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்ட நிலையில் அந்த வைரஸ் பரவல் சீனாவில் இருந்து தான் பரவியதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின. மேலும் பயோ வாரை தொடங்குவதற்காக சீனா மேற்கொண்ட ஆய்வின்போது கொரேனாா வைரஸ் வெளிப்பட்டு உலகம் முழுவதும் பரவியதாக சில தலைவர்கள் புகார் தெரிவித்தன. ஆனால் சீனா தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் என்பது சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு பரவியது என பல நாடுகளால் நம்பப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவில் புதிதாக 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதோடு இந்த வைரஸ்கள் மனிதர்களை தாக்கும் தன்மையுடன் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவின் தெற்கு கடற்கரையில் உள்ள ஹைனான் தீவில் தான் புதிதாக 8 வைரஸ்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எதிர்காலங்களில் கொரோனா போன்ற வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் அதில் இருந்து மனிதர்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றன. இதற்கு சீன அரசு உதவி செய்து வருகிறது. இந்த ஆய்வின்போது வவ்வால்கள் உள்பட கொறித்துண்ணும் உயிரினங்களிடம் இருந்து 700 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் தான் புதிதாக 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது கண்டறியப்பட்டுள்ள 8 வைரஸ்களில் ஒரு வைரஸ் என்பது SARS-CoV-2 எனும் கொரோனா வைரசுக்கான குடும்பத்தை சேர்ந்ததாகும். இந்த புதிய வைரஸ்கள் பரவ தொடங்கினால் மனிதர்களையும் தாக்கும் தன்மையை கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விபரம் வைரலாஜிகா சினிமா எனும் இதழில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் இந்த தகவல் என்பது தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications