அதிசயம்! 87 வயதில் தந்தையான பிரபல சீன ஓவியர்! மனைவிக்கு வயது 37.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த பிரபல ஓவியர் ஃபேன் செங்கிற்கு இப்போது குழந்தை பிறந்துள்ளது. 87 வயதான இவருக்கும் 37 வயதான சூ மெங் என்ற பெண்ணுக்கும் தான் இந்தக் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சீனாவில் பல வினோதச் சம்பவங்கள் நடக்கும். அப்படி அங்கு இப்போது நடந்த ஒரு சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது. அங்கு மிகவும் மதிக்கப்படும் கலைஞர் ஃபேன் செங்.. 87 தான் இவர் சீனாவில் வாழும் மிக முக்கியமான மற்றும் பிரபலமான ஓவியர். இவரது மனைவி 37 வயதான சூ மெங்.

சீன ஓவியர்
இந்தத் தம்பதிக்குத் தான் இப்போது குழந்தை பிறந்துள்ளது. இதை அறிவித்துள்ள ஃபேன் செங், தனது மற்ற குழந்தைகளுடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுவே பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சவுத் சீன மார்னிங் போஸ்ட் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
பாரம்பரியச் சீன ஓவியங்களுக்காக அங்குப் புகழ்பெற்ற நபர் ஃபேன் செங். 2008 முதல் 2024 வரையான காலகட்டத்தில் அவருடைய ஓவியங்கள் 4 பில்லியனுக்கும் அதிகமான யுவான், அதாவது சுமார் 5000 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் இருக்கிறது. இவரது பல ஓவியங்கள் 10 மில்லியன் யுவானுக்கு அதிகமாக ஏலம் போய் இருக்கிறதாம். உதாரணமாக 1991ல் இவர் வரைந்த ஒரு ஓவியம் 2011ல் 18.4 மில்லியன் யுவானுக்கு, அதாவது சுமார் ரூ.23 கோடிக்கு விற்கப்பட்டன.
குழந்தை
இப்படிச் சீன கலை உலகில் முக்கிய நபராக இருக்கும் ஃபேன் தம்பதிக்குக் கடந்த டிசம்பர் 11ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்தார். மனைவி, மகனுடன் புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்த அவர், தனக்கு வயதாகிவிட்டதால் இனி தனது குடும்ப விவகாரம் மற்று நிதி விவகாரங்களை சூ மெங் கவனிப்பார் என அறிவித்துள்ளார்.
வெடித்த சர்ச்சை
இப்போது பிறந்துள்ள குழந்தையை அவர் தனது ஒரே மகன் என்றும் அறிவித்துள்ளார். இதுவே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால் இவருக்கு ஏற்கனவே ஃபேன் சியாவோஹுய் என்ற மகளும், ஃபேன் சோங்டா என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர். இவர்களுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அவர்களின் குடும்பங்களுடனான உறவுகளை முழுமையாகத் துண்டிப்பதாக ஃபேன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
மேலும், இவர்கள் தனது பெயரைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சில நபர்கள் வேண்டும் என்றே தனது குடும்பம் பற்றி வதந்திகளைப் பரப்புவதாகவும் அதை நம்ப வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். செய்வதாகக் குற்றம் சாட்டினார்.
பூசல்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே ஃபேனின் குடும்பத்தில் தொடர்ச்சியாகப் பல்வேறு பூசல்கள் ஏற்பட்டு வருகிறது.. கடந்த ஆகஸ்டில், ஃபேன் மகள் சியாவோஹுய் தனது தந்தையைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறினார். அவரது இளம் மனைவி சூ மெங், அவரைக் கட்டுப்படுத்துவதாகவும், அனுமதியின்றி ஓவியங்களை விற்பனை செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், தனது தந்தையை சூ மெங் தவறாக நடத்துவதாகவும் 2 பில்லியன் யுவான் (சுமார் 2,400 கோடி ரூபாய்) மதிப்புள்ள ஃபேனுக்கு சொந்தமான பல கலைப்படைப்புகளை ரகசியமாக விற்றதாகவும் அப்போது சாடினார்.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் பிறந்த ஃபேன், பீஜிங்கின் மத்திய கழகத்தில் கலை படித்தார்.. லி கெரான் மற்றும் லி குச்சன் போன்ற பிரபலக் கலைஞர்களிடம் பயிற்சி பெற்றார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் ஃபேன் இன்னும் சீனாவில் மதிக்கப்படும் கலைஞராக இருக்கிறது. அவருடைய படைப்புகள் பல கோடிக்கு ஏலம் போகிறது.












Click it and Unblock the Notifications