குடும்பத் தலைவரை இழந்து வாடும் குடும்பம்.. உதவி செய்யுங்களேன்!

Subscribe to Oneindia Tamil

ஓமன்: ஓமனில் வேலை பார்த்து வந்த நெல்லையைச் சேர்ந்த பவுல்ராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். நிதி பிரச்சனையால் தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நெல்லையைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவர் 26-09-2014 வெள்ளிக்கிழமை மாலை ஓமனில் உள்ள நிஷ்வா மீன் சந்தைக்கு மீன் வாங்க சென்றார். அப்போது மீன் சந்தையில் வைத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் 30-09-2014 அன்று இரவு ஜெட் விமானத்தில் இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

1.10.2014 அன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான நெல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு எமிமால் ஜெபகனி என்ற மனைவியும், ஜெயசெல்லி(11) என்ற மகளும், ஜெபதுரை(3) என்ற மகனும் உள்ளனர்.

பவுல்ராஜின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்துக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் நல்லுள்ளம் கொண்டவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற அளவு பண உதவி செய்து வருகின்றனர். இந்த செய்தியை படிப்பவர்களும் உங்களால் முடிந்த அளவுக்கு பண உதவி செய்யலாம். அவருடைய மனைவி பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு நேரடியாகவே உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்ளப்படுகிறது.

அவரது மனைவியின் வங்கி விபரம்:

பெயர்: பி. எமிமால் ஜெபகனி (P.Emimal Jebakani)

வங்கி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

கிளை: பெருமாள்புரம், திருநெல்வேலி

கணக்கு எண்: 150701000007319

முகவரி: பாளையங்கோட்டை, திருநெல்வேலி,

தமிழ்நாடு -627007.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+