20 ஆண்டுகளாக எந்த வேலை தராமல் முழு சம்பளம் கொடுத்த பிரான்ஸ் நிறுவனம்.. பெண் போட்ட விசித்திர வழக்கு

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: 20 ஆண்டுகளாக எந்த வேலை தராமல் முழு சம்பளம் கொடுத்திருக்கிறது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்திற்கு எதிராக சம்பளம் வாங்கிய பெண் வழக்கு போட்டது தான் ஹைலைட்டாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.

இந்த உலகில் பல்வேறு வினோதங்கள் தினமும் அரங்கேறுகின்றன. அப்படி ஒரு சம்பவத்தை பற்றித்தான் பார்க்க போகிறோம். சம்பளமே ஒழுங்காக தராமல் வேலை வாங்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரு பிரான்ஸ் நிறுவனம் தனது பணியாளரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு 20 ஆண்டுகளாக எந்த வேலையும் கொடுக்காமல் முழு சம்பளம் தந்து வந்திருக்கிறது.

world job salary

இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் தனக்கு நிறுவனம் வேலையே தராமல் சம்பளம் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் நீதிமன்றம் வரைபடியேறி உள்ளார். யாராவது இப்படி செய்வார்களா என்ற கேள்வியும், ஆச்சர்யமும் வந்தால், அது தான் உலகின் நடக்கும் வினோதங்களில் ஒன்று. சரி விஷயத்திற்கு வருவோம்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாரன்ஸ் வான் என்ற பெண் கடந்த1993-ம் ஆண்டு ஒரு டெலிகாம் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். அவருக்கு உடலில் பகுதி பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் லாரன்ஸ் வான் வலிப்புநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த நிறுவனம் லாரன்ஸ் வானுக்கு ஏற்ற வேலையை தொடக்க காலத்தில் வழங்கி உள்ளது.

ஆனால் லாரன்ஸ் வான் கடந்த 2002-ம் ஆண்டு, பிரான்ஸில் உள்ள வேறு பகுதிக்கு பணியிடம் மாற்றம் பெற்று சென்று விட்டார் அங்கு அவருக்கு ஏற்ற வேலையை அந்த நிறுவனம் வழங்கவில்லை. அதாவது முன்னாடி வேலை செய்த இடத்தில் கொடுக்கப்பட்டது போன்ற பணியினை அந்நிறுவனம் லாரன்ஸ் வானுக்கு தரவில்லை. வேலையே செய்யாமல் தொடர்ந்து பல வருடங்களாக முழு சம்பளம் மாதம் மாதம் வாங்கியபடி லாரன்ஸ் வான் வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார்..

இதனிடையே லாரன்ஸ் வான் வேலை பார்த்த நிறுவனத்தின் பெயர் கடந்த 2013-ல் ஆரஞ்ச் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிதாக பெயர் மாறியது போல் நிறுவனமும் மாறி தனக்கு பணி வழங்கும் என்று காத்திருந்த லாரன்ஸ்வானுக்கு எந்த பணியும் அதன்பிறகும் வழங்கப்படவில்லை.. சும்மாவே 20 வருடங்களுக்கு மேல் இருந்த லாரன்ஸ் வானுக்கு முழு சம்பளத்தை மாதம் மாதம் ஆரஞ்ச் நிறுவனம் வழங்கி வந்திருக்கிறது.

முதலில் இதை ஏற்றுக்கொண்டாலும், ஒரு கட்டத்தில் சம்பளம் வாங்கிவிட்டு வேலை செய்யாமல் இருப்பதற்கு லாரன்ஸ் வானும் மனம் ஒப்புக் கொள்ளவில்லை.. கேட்டுக் கேட்டுபார்த்த அவர் ஒரு கட்டத்தில் வாசன்ஹோவ் கோர்டில் தனது நிறுவனமான ஆரஞ்சுக்கு எதிராக வழக்கே போட்டுவிட்டார்.

அதில் லாரன்ஸ் வான், எனக்கு கடந்த 20 ஆண்டுகளாக வேலை கொடுக்காமல் முழுசம்பளத்தையும் வழங்கி இருக்கிறது ஆரஞ்ச் நிறுவனம், இதன் மூலம் எனக்கு தார்மீக துன்புறுத்தலை நான் வேலை செய்யும் நிறுவனம் தருகிறது என்றும் இதனால் தொழில்முறை அனுபவத்தை தான் இழக்க நேரிடும் என்றும் மனுவில் கூறியிருந்தார்..

இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ஆரஞ்ச் நிறுவனம், "பெண் பணியாளர் லாரன்ஸ்வானின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு ஏற்ற பணிச் சூழலை உருவாக்குவது குறித்து நாங்கள் உரிய முறையில் பரிசீலித்தோம். ஆனால், அவருடைய மருத்துவ விடுப்பு இந்த செயல் முறையை எங்களுக்கு மிகவும் கடினமாக்கிவிட்டது" என்று விளக்கம் அளித்துள்ளது.

20 ஆண்டுகளாக வேலை தராமல் சம்பளம் கொடுக்கும் நிறுவனத்துக்கு எதிராக பெண் வழக்கு போட்டிருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மனசாட்சி உறுத்தியதால் அவர் இப்படி செய்திருப்பார் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+