For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்படி ஒரு சவாலா? இந்த 13 திகில் படங்களை தனியாக பார்த்தால் ரூ. 1 லட்சம் பரிசு.. சுவாரசியமான போட்டி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் பிரபலமான 13 திகில் படங்களை பார்ப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கொடுக்கப்படும் என்றுபிரபல நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

உங்களால் பேய் படங்களை தனியாக உட்கார்ந்து பார்க்க முடியுமா? எத்தனை பேய் வந்தாலும் ஒற்றை ஆளாக நின்று கடைசி நொடி வரை படம் பார்க்க முடியுமா? உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட போட்டிதான் Horror Movie Heart Rate Analyst'. ஆமாம்.. அமெரிக்காவில் பேய் படம் பார்ப்பவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் வரை பரிசு கொடுக்கிறார்கள்.

நீட் விலக்கு சாத்தியமா? தமிழ்நாடு பாணியில் பிரதமர் மோடியே எதிர்த்துள்ளார்.. வரலாறு என்ன? நீட் விலக்கு சாத்தியமா? தமிழ்நாடு பாணியில் பிரதமர் மோடியே எதிர்த்துள்ளார்.. வரலாறு என்ன?

பொதுவாகவே பேய் படங்களை வைத்து உலகம் முழுக்க பல போட்டிகள் நடத்தப்படுவது உண்டு. பேய் படங்களை தனியாக பார்த்தால் இவ்வளவு பரிசு தரப்படும் என்று போட்டிகள் அறிவிக்கப்பட்டது உண்டு. சில படங்களின் புரொமோஷன் பணிகளுக்காகவும் இப்படி போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

போட்டி

போட்டி

தமிழில் கூட ஷாக் என்ற நடிகர் பிரஷாந்த் நடித்த படம் வெளியான போது இதேபோல்தான் புரொமோஷன் செய்யப்பட்டது. இந்த படத்தை தனியாக பார்த்தால் பரிசு கொடுக்கப்படும் என்று அப்போது புரொமோஷன் செய்து இருந்தனர். இந்த நிலையில் பினான்ஸ்பஸ் (FinanceBuzz) என்ற நிறுவனம் திகில் படங்கள் பார்க்கும் போட்டி ஒன்றை நடத்துகிறது. இது போட்டி என்று சொல்வதை விட வேலை என்று சொன்னால்தான் சரியாக இருக்கும்.

எப்படி?

எப்படி?

இந்த விண்ணப்பத்தின்படி.. ஒரு நபர் உலகின் தலைசிறந்த 13 திகில் படங்களை பார்க்க வேண்டும். இந்த படங்களை பார்க்கும் போது ஃபிட்பிட் (FitBit) உதவியுடன் அவர்களின் இதய ஓட்டம் கணக்கிடப்படும். அவர்கள் எந்த படங்களை, எந்த காட்சிகளை பார்க்கும் போது பயப்படுகிறார்கள் என்று இதன் மூலம் கணக்கிடப்படும். இந்த 13 படங்களை 10 நாட்களுக்குள் அவர்கள் பார்க்க வேண்டும். படம் பார்க்கும் எல்லோருக்கும் இந்த பரிசு தொகை வழங்கப்டும்.

பரிசு

பரிசு

இதில் படம் பார்க்கும் நபர்களின் இதய துடிப்பை மிகவும் நெருக்கமாக கண்காணிக்க உள்ளனர். இந்த 13 படங்களை பார்க்கும் நபர்களை வைத்து அந்த நிறுவனம் முக்கியமான கணக்கெடுப்பு ஒன்றை நடத்துகிறது. இதனால் படம் பார்க்கும் எல்லோருக்கும் கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் (95-96 ஆயிரம் ரூபாய்) வழங்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. பினான்ஸ்பஸ் நிறுவனம் மிகப்பெரிய பைனான்ஸ் நிறுவனம் ஆகும். ஹாலிவுட்டில் படங்களுக்கு தயாரிப்பு உதவிகளை செய்து வருகிறது.

ஏன்?

ஏன்?

ஒரு திகில் படம் பார்த்தால் மக்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்று ஆய்வு செய்ய உள்ளனர். அதோடு அதிக பட்ஜெட் படம் பார்த்தால் மக்கள் பயப்படுகிறார்களா அல்லது குறைந்த பட்ஜெட் படம் பார்த்தால் மக்கள் பயப்படுகிறார்களா என்று சோதனை செய்ய உள்ளனர். பட்ஜெட்டிற்கும் திகில் படங்களில் மக்கள் பயப்படுவதற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்று சோதனை செய்ய உள்ளனர். குறைந்த பட்ஜெட் படங்களில் மக்கள் அதிகம் பயப்படுவதாக கருத்து நிலவி வரும் நிலையில் இந்த சோதனையை அந்த நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

பட்ஜெட்

பட்ஜெட்

வருங்காலங்களில் பட தயாரிப்பில் பட்ஜெட் குறித்த திட்டங்களை வகுப்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அந்த நிறுவனம் தனி திரையிடும் அறையை உருவாக்கி உள்ளது. போட்டியாளர்கள் இங்கே தனியாக அமர்ந்து படத்தை பார்க்க வேண்டும். இதற்கான 13 படங்களின் லிஸ்டையும் அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது. சா (Saw), அமிட்டிவில்லே ஹாரர் ( Amityville Horror), ஏ க்கோயட் பிளேஸ் ( A Quiet Place), ஏ க்கோயட் பிளேஸ் 2 (A Quiet Place Part 2), கேண்டிமேன் (Candyman), இன்சிடியஸ் (Insidious), தி பிளேயர் விட்ச் புரொஜெக்ட்(The Blair Witch Project.), சினிஸ்டர்(Sinister), கெட் அவுட் (Get Out), தி பர்ஜ் (The Purge), ஹாலவீன் 2018 (Halloween 2018), பேரனார்மல் ஆக்டிவிட்டி(Paranormal Activity), அனபெல் (Annabelle) ஆகிய படங்களை பார்க்க வேண்டும் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

English summary
A company to pay almost 1 lakh rupees to watch 13 horror movies in 10 days in USA to analyse the heart beat of a audience.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X