திறக்கவே இல்லாத உணவகத்தை புகழ்ந்தவருக்கு 8 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்!

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: பிரான்ஸில் திறக்கப்படாத உணவகம் ஒன்றின் உணவை ஆகா, ஓகோவென்று புகழ்ந்த ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இணையதளங்களின் கருத்துக்களுக்கு மக்களிடையே மதிப்பு பெருகிவரும் இந்தக் காலத்தில் திறக்கப்படாத உணவகத்தை புகழ்ந்து தள்ளிய வலைப்பதிவாளருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இச் செய்தி வலைத்தள பதிவாளர்களின் கருத்துக்களுக்கு ஒரு உண்மையான வடிவம் தேவை என்ற வடிவில் அமைந்துள்ளது.

திறக்கப்படாத உணவகம்:

திறக்கப்படாத உணவகம்:

பிரான்ஸ் நாட்டில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி "லூயிசேவ் டேஸ் டுக்ஸ்" என்ற உணவகத்தைப் பற்றி அது திறக்கப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே இந்நாட்டின் யெல்லோ பேஜஸ் போன்ற பதிப்பில் ஒருவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஏமாற்றமே மிச்சம்:

ஏமாற்றமே மிச்சம்:

இவரது கருத்துக்களை நம்பி அந்த உணவகத்துக்கு சென்ற மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இது அந்த உணவகத்தின் வருமானத்துக்கு முற்றுப்புள்ளியாய்ப் போனது.

வழக்கு தொடர்ந்த ஹோட்டல்:

வழக்கு தொடர்ந்த ஹோட்டல்:

இதனால், "த கிளாரிபையர்" என்கிற பெயரில் உணவக சிறப்புகளைப் பற்றி எழுதும் இந்த வலைப்பதிவாளருக்கு எதிராக உணவகம் வழக்கு தொடர்ந்தது.

11 ஆயிரம் யூரோக்கள் அபராதம்:

11 ஆயிரம் யூரோக்கள் அபராதம்:

இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகள் கழித்து பதினோராயிரம் யூரோக்களை அதாவது இந்திய மதிப்பில் 8 லட்ச ரூபாயை அந்த உணவகத்துக்கு இழப்பீடாக செலுத்தும்படி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+