கண்ணிமைக்கும் நேரத்தில் கதை முடிந்தது.. கப்பல் மீது இடிந்து விழுந்த ராட்சச மலை.. கடைசி நிமிட வீடியோ!
பிரேசில்லியா: பிரேசிலில் சிறிய ரக பயணிகள் கப்பல் ஒன்றின் மீது ராட்சச மலை ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரேசில் நாட்டில் கேப்டோலியோ என்ற பகுதியில் இருக்கும் பர்னஸ் என்ற ஏரி மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். உலகம் முழுக்க பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கே வருவது வழக்கம். நான்கு பக்கமும் மலை சூழ நடுவில் நீர் பகுதி அமைந்து இருக்கும் காட்சி இங்கு பார்க்கவே ரம்மியமாக இருக்கும்.
பிரேசிலில் முக்கியமான சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்று. இந்த மலை பகுதியில்தான் நேற்று அந்த கொடுமையான விபத்து ஏற்பட்டது.

என்ன நடந்தது?
அண்ட் பர்னஸ் ஏரியை பார்வையிட எப்போதும் போல நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் வந்துள்ளனர். சிறிய சிறிய படகுகளில் மலைகள் சூழப்பட்ட அந்த இடத்தை மக்கள் பார்வையிட்டு உள்ளனர். அப்போது படகு ஒன்றில் இருந்த பயணி அந்த அழகான பகுதியை வீடியோவாக எடுத்துள்ளார். நான்கு பக்கமும் இருக்கும் மலையை சுற்றி சுற்றி அவர் வீடியோவாக எடுத்து இருக்கிறார். ஆனால் அப்போது அவருக்கு தெரியாது.. அடுத்த நொடி நடக்க போகும் அந்த கொடூரம்!

கொடூரம்
அந்த வீடியோ எடுக்கப்பட்ட நேரத்தில் அங்கு இருந்த நான்கு மலைகளில் ஒரு மலையில் இருந்து பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக விழுந்துள்ளது. இது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. மலையில் இருந்து பாறைகள் உடைந்து அடுத்தடுத்து விழுந்தது அந்த வீடியோவில் தத்ரூபமாக பதிவாகி இருந்தது. முதலில் சிறிய சிறிய கற்கள்தான் விழுந்து இருக்கிறது. ஆனால் போக போக பெரிய பெரிய பாறைகள் உடைந்து விழ தொடங்கின.

மலை விழுந்தது
இந்த நிலையில்தான் பெரிய சைஸ் பாறை விழுந்ததால் அங்கு படகில் இருந்தவர்கள் அச்சப்பட்டுக்கொண்டு படகை எதிர் திசையில் திருப்பி நகர்ந்து கொண்டு இருந்தனர். அந்த நொடியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த மலையின் ராட்சச பகுதி அப்படியே பிளந்து கீழே இருந்த படகுகள் மீது விழுந்து நொறுங்கியது. மேலும் அந்த பாறைகள் வேகமாக ஏரியில் விழுந்ததால் சுனாமி அளவிற்கு மிகப்பெரிய அலை ஏற்பட்டு அங்கு இருந்த 3 படகுகளை கபளீகரம் செய்தது.

அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் அப்படியே அந்த வீடியோவில் பதிவாகி வெளியாகி உள்ளது. மலை உடைந்து விழும் கடைசி நொடியில் என்ன நடந்தது என்பது அந்த வீடியோவில் தத்ரூபமாக பதிவாகி உள்ளது. இந்த விபத்தின் வீடியோ இணையம் முழுக்க வெளியாகி வைரலாகி வருகிறது. மொத்தம் 7 பேர் இந்த சம்பவத்தில் பலியாகி உள்ளனர். 32 பேர் காயம் அடைந்துள்ளனர். காணாமல் போன 20 பேரில் 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 3 படகுகள் மொத்தமாக தண்ணீரில் மூழ்கி உள்ளது.

மீட்பு பணி
அங்கு தற்போது தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 12 ,மணி நேரமாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் அங்கு பெய்த மழை காரணமாக நிறைய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல் பல இடங்களில் மலைகளில் விரிசல் ஏற்பட்டும் காணப்பட்டது. இதனால் அந்த மலைப்பகுதி வலிமை இழந்து இருக்கலாம். அதன் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications