அப்போ அது நாய் இல்லையா..! 2 வருசமா நூடுல்ஸ் போட்டு வளர்த்துட்டு பார்த்தா.. ஆடிப்போன குடும்பம்
சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் நாய் என நினைத்து கரடியை இரண்டு ஆண்டுகளாக வளர்த்துள்ளார்
பெய்ஜிங்: நாய் என நினைத்து இரண்டு ஆண்டுகளாக நூடுல்ஸ் போட்டு கருப்பு கரடியை சீனாவில் உள்ள குடும்பம் ஒன்று வளர்த்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் யுனான் மாகாணத்தில் வசித்து வருபவர் சு யுன். இவருக்கு நாய்க்குட்டி என்றால் மிகவும் விருப்பம். ஆனால் பணிச்சூழல் காரணமாக இவரால் நாயை வளர்க்க முடியவில்லை. இந்நிலையில் தன்னுடைய குழந்தைகள் நாய்க்குட்டியை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். சரி நமக்கும் நாய்க்குட்டி வளர்க்க ஆசையாக இருக்கிறது, இப்போது குழந்தைகளும் கேட்க தொடங்கிவிட்டனர். போனால் போகட்டும் ஒரு குட்டியை வாங்கிடலாம் என்று திபெத்திய மாஸ்டிஃப் வகையை சேர்ந்த நாய்க்குட்டியை வாங்கி வந்துள்ளார்.
இந்த வகை நாய்கள் எல்லா இடங்களிலும் இருக்காது. பாண்டா கரடிகளை போல ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும்தான் வாழும். குறிப்பாக இமயமலை அடிவாரங்களில் மட்டுமதான் வாழும். அங்கு நிலவும் கடுமையான குளிரையும் இதனால் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதால் பழங்காலம் தொட்டே சீனர்கள் இதனை வேட்டைக்காகவும், பாதுகாப்புக்காகவும் வளர்த்து வந்துள்ளனர்.

நூடுல்ஸ்
பார்ப்பதற்கு கரடி போலவே உடல் முழுவதும் அடர்த்தியான முடிகளை இது கொண்டிருக்கும். இதுதான் இமயமலை குளிரிலிருந்து இதனை பாதுகாக்கிறது. நன்குவளர்ந்த திபெத்திய மாஸ்டிஃப் சுமார் 68 கி.கி வரை எடையும் 66 செ.மீ உயரமும் கொண்டிருக்கும். ஆனால் குட்டியில் இதுவா திபெத்திய மாஸ்டிஃப்? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு சிறியதாக இருக்கும். சு யுனும் இதே போன்றஒரு குட்டையைதான் வாங்கி வந்துள்ளார். சிறுவயதிலிருந்து பால், இறைச்சி, நூடுல்ஸ் ஆகியவற்றை உணவாக கொடுத்திருக்கிறார்கள். இதில் இந்த குட்டிக்கு
நூடுல்ஸை மிகவும் பிடித்துவிட்டது.

பெரிய குட்டி
நாட்களும் மெல்ல மெல்ல சென்றுள்ளன. குட்டியும் பெரியதாக வளர்ந்திருக்கிறது.ஆனால் இது இரண்டு கால்களில் நடக்க தொடங்கியுள்ளது. இப்போதுதான் சுயுன்னுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. என்னடா இது நாம நாய் ரெண்டு கால்லநடக்குதுனு கால்நடை மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். வளர்ந்த
நாயை நேரில் பார்க்காத மருத்துவர்கள், சில நாய்கள் வித்தியாசமாக செய்யும்,
அதேபோல இதுவும் ஏதாவது முயன்றிருக்கலாம் என்று கூறியுள்ளார். சு யுன்னும் ஓ
அப்படியா என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இந்த நாய் குட்டி
அடுத்தடுத்த நாட்களில் வெறும் இரண்டு கால்களில் மட்டுமே நடக்க தொடங்கி இருக்கிறது.

கரடி
மட்டுமல்லாது வீட்டின் பரன் மேல் ஏறி அங்கிருந்த நூடுல்ஸை எடுத்து சாப்பிட தொடங்கியுள்ளது. எனவே டவுட் ஆன சு யுன் வீட்டுக்கே ஒரு கால்நடை மருத்துவரைகையோடு அழைத்து வந்து நாய்க்குட்டியை காட்டியிருக்கிறார். குட்யை பார்த்த டாக்டர் ஷாக்காகி, "ஹலோ பிரதர் யு சுன்! நீங்கள் நாயுனு நெனைச்சு வளர்த்துட்டு இருக்கிறது நாய் கிடையாது. அது ஒரு கரடி" என்று கூறியுள்ளார்.இதை கேட்ட யு சுன், கூலாக "நான் அப்போவே நெனைச்சன் டாக்டர். இப்போ அது கன்பார்ம் ஆயுடுச்சி" என்று கூறியுள்ளார். இதனையடுத்து வன விலங்குகள்காப்பகத்திற்கு அழைத்து இந்த விஷயத்தை கூறியுள்ளார் யு சுன்.

வனத்துறையினர்
தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடித்துசென்றனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் கூறுகையில், "இது ஒரு ஆசியகருப்பு கரடி. எல்லா கருப்பு கரடியை போலவே இது வெறுமென கருப்பாக மட்டும்
இருக்காது. மாறாக கழுத்தில் ஒரு பெரிய சைன் போல பிரவுன் கலரில் கோடுஇருக்கும். இதுதான் மற்ற இனத்திலிருந்து இந்த கரடி வகையை தனித்துகாட்டுகிறது. மட்டுமல்லாது இந்த வகை கரடி இனங்கள் வேகமாக அழிந்துவருகின்றன. பாரம்பரிய மருந்துகளை தயாரிக்க இந்த கரடிகள் பொறி வைத்துபிடிக்கப்பட்டு கொல்லப்படுகிறது. எனவே இதனை வளர்ப்பது, வேட்டையாடுவது
உள்ளிட்டவை சீனாவில் பெரும் குற்றமாக கருதப்படுகிறது. இதில் என்னசுவாரசியம் என்றால் இந்த சம்பவம் முழுவதும் 2018ம் ஆண்டு நடந்திருக்கிறது.ஆனால் தற்போது இந்த கதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications