ஈரான் போர் ஆரம்பித்த பின் முதல் முறை நல்ல சம்பவம்.. ஹார்முஸை கடந்த 2 அமெரிக்க போர்க்கப்பல்கள்
தெஹ்ரான்: ஈரான் உடனான போர் தொடங்கிய பிறகு, முதல் முறையாக அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், முதல்முறையாக அமெரிக்கா கப்பல்கள் கடந்துள்ளன. "இந்த முக்கிய கடல்வழிப் பாதையை நாங்கள் சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டோம் (கன்னிவெடிகளை அகற்றுவது)" என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. அமெரிக்கா உடன் இணைந்து இஸ்ரேலும் ஈரானை தாக்கி வருகிறது. இதில் தெளிவான உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அமெரிக்காவே இஸ்ரேலுக்கு ஆதரவாகவே போரில் இறங்கி உள்ளது. நேரடியாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் பெரிய பிரச்சனைகள் இல்லை.. ஆனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் பெரிய பிரச்சனை ஓடுகிறது. பாலஸ்தீனம், லெபனான், ஏமன் போன்ற நாடுகளால் இஸ்ரேலுக்கு வரும் தொல்லைக்கு ஈரான் காரணம் என நினைக்கிறது. அதனால் ஈரானை இஸ்ரேல் தாக்கியது. அதற்கு ஆதரவாக அமெரிக்கா தாக்கியது. பதிலுக்கு ஈரானும் தாக்கியது. அத்துடன் ஈரான் உலக கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. அந்த முடக்கத்தை நிறுத்தவே அமெரிக்கா இப்போத பல வழிகளில் முயன்று வருகிறது.

இந்த சூழலில் ஈரான் உடனான போர் தொடங்கிய பிறகு, முதல் முறையாக அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. அமெரிக்க கடற்படையின் ஏவுகணை தாங்கி அழிக்கும் கப்பல்கள் எந்தவிதமான இடையூறும் இன்றி இந்தப் பாதையைக் கடந்ததாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த ஆபத்தான ராணுவ நடவடிக்கை குறித்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அந்நாட்டு அதிகாரிகளிடம் எந்தவித ஆலோசனையும் அமெரிக்கா செய்யாமலேயே கடந்ததாக தெரிகிறது.
தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், "நாங்கள் இப்போது ஹார்முஸ் ஜலசந்தியைச் சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கிவிட்டோம். சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இதைச் செய்யும் தைரியமோ அல்லது மனமோ கிடையாது. அவர்களுக்கு ஒரு உதவியாகத்தான் இதை நாங்கள் செய்கிறோம்." என்றார்.
மேலும், இந்தப் போரில் ஈரான் படுதோல்வியைச் சந்தித்து வருவதாகவும், கடலில் ஈரான் விரித்து வைத்துள்ள கண்ணிவெடிகளால் மட்டுமே இனி கப்பல்களுக்குச் சிறு அச்சுறுத்தல் இருக்கக்கூடும் என்றும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
உலக எண்ணெய் விநியோகத்தில் 20% செல்லும் ஹார்முஸ் பாதையை ஈரான் திறக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான நிபந்தனையாக பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முன் வைத்து வருகிறது. அதேநேரம் போர்க்கப்பல்கள் கடலில் சீறிக்கொண்டிருக்க, மறுபுறம் பாகிஸ்தானில் ஈரான் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் சனிக்கிழமை முதல் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் , "இரு தரப்புப் பிரதிநிதிகளும் ஆக்கபூர்வமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான உறுதிப்பாட்டைப் பாராட்டிய பிரதமர், இந்தப் பேச்சுவார்த்தைகள் இப்பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு படிக்கல்லாக அமையும் " என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தப் பிராந்தியத்தில் நிலையான அ மைதியை நோக்கிய முன்னேற்றத்தை அடைவதில், இரு தரப்பினருக்கும் தொடர்ந்து உதவிகளை வழங்க பாகிஸ்தான் ஆவலுடன் காத்திருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் வலியுறுத்தினார்.
-
அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டம்.. பாக்., பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை அதிபர்! -
இஸ்லாமாபாத்தில் இனிப்பு பேச்சு.. ஹார்முஸ் ஜலசந்தியில் சத்தமே இல்லாமல் சம்பவம்.. ட்ரம்ப் அதிரடி -
நடுவில் பாகிஸ்தானை வைத்து.. ஈரானிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியது அமெரிக்கா! அடுத்து என்ன நடக்கும்? -
ஈரானுக்கு திரும்ப கிடைக்க போகும் மிகப்பெரிய சொத்துக்கள்.. அமெரிக்கா சம்மதித்தது ஏன்? -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
40 நாள் வெறியாட்டம்.. ஈரானை பந்தாடிய இஸ்ரேல் எவ்வளவு செலவு செய்தது..? பரபர தகவல் வெளியானது! -
கடலில் கண்ணிவெடி வச்ச இடத்தை மறந்த ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியில் பெரிய டேஞ்சர்.. போச்சு! -
போதையில் பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்? மிக பெரிய போர் வெடித்திருக்கும்.. அலட்சியத்தின் உச்சம் -
அடங்க மறுக்கும் ஈரான்.. விடாமல் விரட்டும் ட்ரம்ப்.. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் வெடிக்கும் போர்? -
1.4 கோடி வரை சம்பளம்.. வீடியோ கேம் விளையாட தெரிந்தால்.. அமெரிக்காவில் லட்டு மாதிரி வேலை -
மீண்டும் வெடிக்கும் போர்? ஹார்முஸ் அருகே அமெரிக்காவின் ₹1,600 கோடி ட்ரோன் மாயம்.! உச்சக்கட்ட பதற்றம் -
ஒப்பந்தம் ஏற்படாமல் போகட்டு, அப்புறம் இருக்கு.. பேச்சுவார்த்தைக்கு முன்பே ஈரானை மிரட்டும் அமெரிக்கா -
ஈரான் போரால் ஐரோப்பாவுக்கு புது சிக்கல்.. 3 வாரம் தான் கெடு! -
மினாப் 168: ரத்தத்தில் மூழ்கிய புத்தகம், ஷூ, ஸ்கூல் பேக்.. அமெரிக்காவை நடுங்க வைக்கும் ஈரானின் செயல்! -
விண்டோஸை தூக்கி எறியும் பிரான்ஸ்... அமெரிக்காவிற்கு பயப்படுகிறதா.. பின்னணி என்ன?













Click it and Unblock the Notifications