என் ரோஜா உன்னிடம் வந்து சேர்ந்ததா அன்பே.. உருக வைத்த இங்கிலாந்து பெண்!
அன்பை வெளிப்படுத்தும் இங்கிலாந்து பெண்ணின் புகைப்படம் வைரலாகிறது.
Recommended Video

சுட்டன் கோல்ட்பீல்ட், பிர்மிங்காம்: இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரது இதயத்தையும் உருக்கியுள்ளது. கற்பனை கூட செய்து பார்க்க முடியாத உணர்ச்சிப் பெருக்கான சம்பவம் இது.
பிர்மிங்காமின் சுட்டன் கோல்ட்பீல்டில் ஒரு படகு மையம் உள்ளது. அதன் பெயர் பிவிஜிஎஸ் ரோவிங். இந்த படகு இல்லத்தின் நுழைவாயில் கேட்டில் ஒரு ரோஜாப் பூவும், கூடவே ஒரு குறிப்பும் வைக்கப்பட்டிருந்தது. அதை வைத்தது யார் என்று தெரியவில்லை.
அதைப் பார்த்த அந்த படகு மையத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் குறிப்பைப் பார்த்து அதிர்ந்து விக்கித்து நின்று விட்டனர். அந்த குறிப்பில், யாராவது இந்த ரோஜாவை ஏரியில் போட முடியுமா? எனது மறைந்த கணவரின் அஸ்தி இந்த ஏரியில்தான் கலந்துள்ளது. என்னால் ஏரிக்குச் செல்ல முடியவில்லை. எனது வீல் சேர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. மேலும் படகு இல்லத்தின் நுழைவாயிலும் மூடப்பட்டு விட்டது. நான் இரவுக்குள் வீட்டுக்குத் திரும்பிப் போக வேண்டும். நன்றி என்று எழுதப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து நெகிழ்ந்து போன படகு இல்லத்தினர் அந்த ரோஜாவை, பெயர் முகம் தெரியாத அப்பெண்ணின் விருப்பபடி ஏரியின் நடுவில் விட்டனர். மேலும் அதை புகைப்படம் எடுத்து தங்களது டிவிட்டரிலும் போட்டுள்ளனர். அதில் யார் என்று தெரியாது. ஆனால் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.
|
வைரல் புகைப்படம்
உலகெங்கும் இந்த ரோஜா புகைப்படமும், அப்பெண்ணின் நெகிழ்ச்சியான கோரிக்கையும் வைரலாகியுள்ளது. பலரும் உருக்கமாக தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
மனிதம் உயிர்ப்போடு இருக்கிறதென்றால்.. அந்த உயிர்ப்பை பிடித்து இறுக்கி வைத்திருப்பது காதல்தான்... அன்பும், பாசமும், காதலும் இயைந்து உருகி ஓடுகிறது இப்பெண்ணின் உணர்வுகளில்.
|
உயிர்ப்பிக்கப்பட்ட மனிதம்
மனிதகுலம் மீதான நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மனிதம் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
|
வருத்தத்துடன் கூடிய மகிழ்ச்சி
இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. வருத்தமாகவும் இருக்கிறது. படகு இல்லத்துக்குப் பாராட்டுக்கள்.
|
அருமையான செய்தி
நான் இதுவரை படித்த செய்திகளிலையே மிகவும் அழகான, அதேசமயம், மிகவும் துயரமானது இதுதான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications