"மிஸ்ஸானா காலி".. சுத்தி சுத்தி அணு உலை! ரஷ்யாவின் Powerful ஏவுகணை அட்டாக்.. உலக நாடுகளுக்கு ஆபத்து?

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவின் தொடர் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனுக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்று காத்து இருப்பதாக உக்ரைன் நாட்டு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா மிக ஆக்ரோஷமான ஆக்கிரமிப்பை தற்போது உக்ரைனில் மேற்கொண்டு உள்ளது. உக்ரைனுக்குள் இன்று காலை புகுந்த ரஷ்யா தீவிரமாக ராணுவ தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. உக்ரைனின் கிழக்கு பகுதிக்குள் ராணுவ படைகளும், விமான படைகளும் மாறி மாறி தாக்கி வருகின்றன.

இன்னொரு பக்கம் ரஷ்யாவின் ஏவுகணைகளும் உக்ரைனில் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

எங்கே தாக்குதல்

எங்கே தாக்குதல்

காலை 8.30 மணிக்கு இந்த தாக்குதல் தொடங்கியது. முக்கியமாக அந்நாட்டு பாதுகாப்பு துறை தளவாடங்களை குறி வைத்து ரஷ்யா தாக்கி வருகிறது. இன்று காலையிலேயே உக்ரைனில் இருக்கும் பாதுகாப்பு தலைமையகத்தை ரஷ்யா தாக்கி அழித்தது. அதேபோல் கிழக்கு உக்ரைனில் இருக்கும் பாதுகாப்பு தளவாடங்கள், விமான நிலையங்கள், விமானப்படை மையங்களை ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகள் மூலம் தாக்கியது.

எத்தனை பேர் பலி?

எத்தனை பேர் பலி?

இதில் இதுவரை 100 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தலைநகர் கையிவ், முக்கிய நகரங்களான கர்க்கிவ், டின்ப்ரோ ஆகிய பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ராணுவ ரீதியாக உக்ரைன் வலிமையாக இருக்கும் பகுதிகளை முதலில் ரஷ்யா தாக்கி உள்ளது. இதனால் கிழக்கு உக்ரைன் மிகப்பெரிய அளவில் பதற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கிழக்கு உக்ரைனை உக்ரைனில் இருந்து பிரித்து இரண்டு தனி ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்க ரஷ்யா இந்த போரை தொடுத்துள்ளது.

 ஏவுகணை தாக்குதல்

ஏவுகணை தாக்குதல்

ரஷ்யாவின் தொடர் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனுக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்று காத்து இருப்பதாக உக்ரைன் நாட்டு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைனுக்கு மட்டுமின்றி சுற்றுசூழல் ரீதியாக இந்த ஆபத்து ஏற்படும் என்று உக்ரைன் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அது என்ன ஆபத்து என்று பார்க்கலாம்.. உக்ரைன் நாடு தங்களின் மின்சார தேவைக்கு அதிக அளவில் அணு உலைகளை நம்பித்தான் இருக்கிறது.உக்ரைன் நாட்டின் 52 சதவிகிதம் மின் தேவையை அணு உலைதான் பூர்த்தி செய்கிறது.

 அணு உலை

அணு உலை


அங்கு மொத்தம் 15 அணு மின் நிலைய உலைகள் உள்ளது. கேல்நிட்ஸ்கி, ரிவின், தென்மேற்கு, சசபோரியா, தெற்கு உக்ரைன் ஆகிய பகுதிகளில் இந்த அணு உலைகள் உள்ளது. அதிகமாக கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில்தான் அணு உலைகள் உள்ளன. இப்போது ரஷ்யா இங்கு தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் வரும் நாட்களில் கண்டிப்பாக ரஷ்யா இங்கே முன்னேறி வரும். பொதுவாக அணு உலைகளை போரின் போது எந்த நாடும் தாக்காது.

ரஷ்யா அட்டாக்

ரஷ்யா அட்டாக்

அதோடு ரஷ்யாவிற்கு ஏற்கனவே செர்னோபில் அணு உலை வெடித்த அனுபவம் ரஷ்யாவிற்கு உள்ளது. அதோடு உக்ரைன் அண்டை நாடு என்பதால் அந்த நாட்டின் அணு உலையை தாக்கும் ரிஸ்க்கை ரஷ்யா எடுக்காது. ஆனால் ஒருவேளை ஏவுகணைகள் லேசாக மிஸ்ஸாகி தாக்கினாலும் கதை ஓவர். இந்த போரில் மற்ற நாடுகள் பங்கேற்கும் பட்சத்தில் இது போன்ற மிஸ்ஸான ஏவுகணைகள் அணு உலைகள் மீது தாக்கும் அபாயம் உள்ளது. இங்கு அணு ஆயுதம் தயாரிக்கப்படலாம் என்று ரஷ்யா சந்தேகிப்பது வேறு கதை.

அணு உலை அட்டாக்

அணு உலை அட்டாக்

இதில் இன்னொரு கவலை தரும் விஷயம் உக்ரைன் அணுக்கழிவுகள் எல்லாமே ரஷ்யாவில் 1986 அணு உலை வெடித்த செர்னோபில் அருகேதான் உக்ரைன் குவித்து வைத்துள்ளது. தற்போது இங்குதான் ரஷ்யா 2 லட்சம் படைகளை குவித்து உள்ளது. அதோடு இங்கு அருகே உள்ள பெலாரஸ் எல்லையில்தான் ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வருகிறது. தற்போது ஏவுகணைகள் வீசப்படும் டொன்ஸ்டெக் பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் அணு உலை ஒன்றும் உள்ளது.

அணுக்கழிவு

அணுக்கழிவு

ஏதாவது ஒரு அணு உலை அல்லது அணுக்கழிவு மையத்தில் ஒரு ஏவுகணை தவிர மோதினாலும் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் உக்ரைனில் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கும் புரட்சி படைகளிடம் அவ்வளவு துல்லியமான ஏவுகணைகள் கிடையாது. இது போக உக்ரைனில் இருக்கும் எந்த அணு உலையும் ராணுவ தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு ஏதாவது தாக்குதல் மிஸ்ஸாகி நடந்தாலும் அது அணு கசிவிற்கு வழி வகுக்கும்.

அணு ஆயுத வல்லுனர்

அணு ஆயுத வல்லுனர்

இது பற்றி உக்ரைன் நாட்டு அணு ஆயுத வல்லுனர் Gumenyuk சர்வதேச ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், உக்ரைன் அணு உலகைகள் அவ்வளவு பாதுகாப்பாக இல்லை. ஏதாவது ஒரு தாக்குதல் தவறி நடந்தால் அது உலக அளவில் சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு புகுஷிமா, செர்னோபில் ஆகியவற்றை விட மோசமான பாதிப்புகளை இது ஏற்படுத்தும். ரஷ்யா, உக்ரைன் மட்டுமின்றி சர்வதேச அளவில் அணுக்கழிவு பாதிப்பை இது ஏற்படுத்தும். சர்வதேச அளவில் மிகப்பெரிய சுற்றுசூழல் பாதிப்பை இது உருவாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+