சேர்ந்து வாழ மறுத்ததால்.. காதலனின் ரூ.23 லட்சம் பைக்-ஐ தீ வைத்து கொளுத்திய காதலி.. வீடியோ வைரல்!

Subscribe to Oneindia Tamil

பாங்காங்: காதல் தோல்வி அடைந்த விரக்தியில் இளம்பெண் ஒருவர் காதலனின் பைக்கை தீ வைத்து கொளுத்தினார்.

இன்றைய நவீன உலகில் பல ஆண்டுகள் காதலிக்கும் காதலர்கள் திடீரென சொல்லாமல், கொள்ளாமல் பிரேக் அப் செய்து கொள்வது வழக்கமாகி விட்டது.

காதல் தோல்வியில் முடியும்போது ஒரு சிலர் அதை மறந்து விட்டு அடுத்த வேலையில் கவனம் செலுத்த ஆயத்தமாகி விடுவார்கள்.

பிரேக் அப்

பிரேக் அப்

நமது நாட்டை பொறுத்த வரை பிரேக் அப் ஆகும் வேளையில் ஒரு சிலர் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். வேறு ஒரு சிலர் ஆத்திரத்தில் காதலி மீது தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தாய்லாந்து நாட்டில் காதலன் கைவிட்டு சென்ற ஆத்திரத்தில் இருந்த காதலி அவரது மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.

விரக்தியில் இருந்தார்

விரக்தியில் இருந்தார்

தாய்லாந்த் பாங்காங் நகரில் 36 வயதான இளம்பெண்ணும், இளைஞரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் நெருங்கிய உறவில் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் பல ஆண்டுகள் நீடித்த இவர்களது காதல் திடீரென பிரேக் அப் ஆனது. காதலன் கைவிட்டு சென்றதால் அந்த பெண் மிகவும் விரக்தியில் இருந்தார்.மீண்டும் சேர்ந்து வாழ வரும்படி வலியுறுத்தியபோது காதலன் மறுத்து விட்டார்.

பைக்கிற்கு தீ வைத்தார்

பைக்கிற்கு தீ வைத்தார்

காதலனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் தனது காதலனின் ரூ.23 லட்சம் மதிப்புள்ள பைக் நிறுத்தப்பட்டு இருந்த ஸ்ரீநாகரின்விரோட் பல்கலைக்கழக பிரசார்ன்மிட் வளாகத்தில் உள்ள பார்க்கிங் பகுதிக்கு சென்றார்.. மூன்றாவது மாடிக்கு சென்ற அந்த பெண் , காதலன் நிறுத்தி இருந்த விலை உயர்ந்த பைக்கிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

வீடியோ வைரல்

வீடியோ வைரல்

அந்த தீ அருகில் இருந்த மற்ற பைக்குகளுக்கும் பரவி, அனைத்து பைக்குகளும் தீப்பிடித்து எரிந்தன. இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். ஆனால் பைக்குகள் தீயில் எரிந்து எலும்புக்கூடானது. மாஸ்க் அணிந்து அந்த பெண் பைக்குக்கு தீ வைக்கும் காட்சிகளும், பின்பு காரில் தப்பிச் செல்லும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீட்டியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+