ரத்தத்தைக் குடிக்க வைத்து காதலனை சரமாரியாக கத்தியால் குத்திய காதலி! அமெரிக்காவில் கொடூரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்பிரிங் ஃபீல்டு: மிசவுரி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ரத்தத்தைக்குடிக்குமாறு தனது காதலனை வற்புறுத்தியுள்ளார். பின்னர் அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

அமெரிக்காவின் ஸ்பிரிங்ஃபீல்டு நகரில் விக்டோரியா வானாட்டர் என்பவர் தனது காதலனுடன் வசித்து வந்தார். இவர்கள் ரத்தக்காட்டேரிகளைப் பற்றி விவாதித்துள்ளனர்.

A teenager stabbing her boy friend after letting him drink her blood!

பின்னர் விக்டோரியா குடிபோதையில் இருந்த தனது காதலனிடம் தன் கைகளை வெட்டி ரத்தத்தைக் குடிக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து காய்கறி நறுக்கும் கட்டர் மூலம் வானாட்டரின் கைகளை வெட்டிய அவரது காதலன் ரத்தத்தை உறிஞ்சியுள்ளார்.

அப்போது காதலனின் தோல்பட்டையில் வானாட்டர் சரமாரியாக குத்தியுள்ளார். இதையடுத்து அந்நாட்டின் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்ட அந்த பெண் வீட்டில் ஒருவர் ரத்தவெள்ளத்தில் கிடப்பதாக கூறியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த முதலுதவி குழுவினர் வீட்டை திறந்தபோது வானட்டரின் காதலன் தனக்கு எந்த உதவியும் வேண்டாம் என கூறி கதவை அடைத்துள்ளார். பின்னர் கதவை திறந்த விக்டோரியா, தனது ரத்தத்தை குடிக்குமாறு காதலனை வற்புறுத்தியதாகவும் பின்னர் அவரை கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்தார்.

மேலும் தான் சமுதாயத்துக்கு ஆபத்தான ஒருத்தி என்று கூறிய வானாட்டர் தன்னை விட்டு வைத்தால் ஒரு சீரியல் கில்லராக மாறிவிடுவேன் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வானாட்டரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். வானாட்டருக்கு நீதிமன்றம் 1.50 லட்சம் டாலர்களை பிணைத் தொகையாக செலுத்துமாறு கூறியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A teenager stabbing her boy friend's shoulders after letting him drink her blood as a vampire. she want to be a vampire it seems. police arest her and she is in jain now the court order her to pa 1,50000 dollars as bond.
Please Wait while comments are loading...