உபேரின் மிச்ச மீதி நல்ல பெயரையும் மொத்தமாக கெடுத்த டிரைவர்
மிஷிகன்: அமெரிக்காவில் உபேர் டாக்சி டிரைவர் ஒருவர் 8 பேரை துப்பாக்கியால் சுட்டார். அதில் 6 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் உள்ள காலமாசுவை சேர்ந்தவர் ஜேசன் பிரையன் டால்டன்(45). உபேர் டாக்சி டிரைவர். அவர் கடந்த சனிக்கிழமை மாலை 5.42 மணிக்கு தனது குழந்தைகளுடன் வீட்டு பார்க்கிங் பகுதியில் நின்ற பெண்ணை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நான்கு மணிநேரம் கழித்து டால்டன் ஒரு கார் கடையில் நின்று கொண்டிருந்த தந்தை மற்றும் மகனை சுட்டுக் கொன்றார். அதன் பிறகு உணவகம் பக்கம் சென்ற அவர் பார்க்கிங் பகுதியை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 4 பெண்கள் பலியாகினர், மேலும் 14 வயது சிறுமி காயம் அடைந்தார்.
இந்த சம்பவங்களில் இரண்டு சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் டால்டனை தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் யார் கேட்ட கேள்விக்கும் பதில் அளிக்காமல் மவுனமாகவே இருந்தார்.
கொலை செய்யப்பட்டவர்களுக்கும், டால்டனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. டால்டன் மீது இதுவரை எந்த புகாரும் வந்தது இல்லை. இந்நிலையில் அவர் எதற்காக 6 பேரை கொலை செய்தார் என்பது தெரியவில்லை.
அவர் கொலை செய்ததற்கு இடையே சில பயணிகளை வேறு தனது டாக்சியில் ஏற்றி அவர்கள் செல்ல வேண்டிய இடத்தில் விட்டுள்ளார். அதில் ஒரு பயணி டாக்சியில் ஏறி டால்டனிடம் கூறியது தான் வேடிக்கையான விஷயம்.
யாரோ ஒருவர் துப்பாக்கியால் பலரை கொலை செய்வதை அறிந்த டெரக் என்பவர் நடந்து செல்ல பயந்து கொண்டு டால்டனின் டாக்சியில் ஏறினார். ஏறியவர் டால்டனிடம் யாரோ ஒருவர் துப்பாக்கியால் மக்களை கொலை செய்வதால் நடந்து செல்ல பயந்து கொண்டு டாக்சியில் ஏறினேன். அந்த கொலையாளி நீங்கள் இல்லையல்லவா என்று கேட்டுள்ளார். அதற்கு டால்டன் இல்லை நான் கொலையாளி இல்லை என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளில் உபேர் நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போயுள்ள நிலையில் இந்த கொலை சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications