ஏலியன்களிடம் தொடர்பு கொள்ள வேண்டுமா.. இந்த டிகிரி வாங்கணும்.. துருக்கியில் புதிய படிப்பு!
ஏலியன்களிடம் பேசுவதற்காக துருக்கியில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று புதிய படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
துருக்கி: ஏலியன்களிடம் பேசுவதற்காக துருக்கியில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று புதிய படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 'அக்டேனிஸ்' என்ற அந்த பல்கலைக்கழகம் அந்த படிப்பை அடுத்த மாதத்தில் இருந்து சொல்லிக் கொடுக்க உள்ளது.
இதன் மூலம் எதிர்காலத்தில் ஏலியன்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. 10ல் இருந்து 15 வருடத்திற்குள் இந்த படிப்புக்கு நிறைய எதிர்ப்பார்ப்பு உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகிய சில நாளிலேயே இதில் சேர பலரும் விண்ணப்பித்துள்ளனர்.

ஏலியன்களிடம் பேசும் படிப்பு
துருக்கியில் இருக்கும் அக்டேனிஸ் பல்கலைக்கழகம் புதிய படிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 'யுஃபாலாஜி மற்றும் எக்ஸ்பாலிடிக்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த படிப்பு ஒரே நாளில் வைரல் ஆகியுள்ளது. அதன்படி இந்த படிப்பு ஏலியன்களிடம் பேசுவதற்காக படிப்பு என்று கூறப்படுகிறது. வேற்று கிரகத்தில் இருக்கும் உயிரினங்கள் பூமிக்கு வரும் போது அவர்களிடம் பேச இந்த படிப்பு உதவும் என்று கூறப்படுகிறது.

என்ன கற்றுத்தரப்படும்
இந்த படிப்பில் உலகில் இருக்கும் முக்கியமான மொழிகள் குறித்த தகவல்கள் பாடம் நடத்தப்படும். மொழி தெரியாத, மொழி இல்லாத மக்களிடம் பேசுவது எப்படி என்று கற்றுத்தரப்படும். மேலும் ஏலியன்களின் மொழியை புரிந்து கொள்வதற்கு கருவிகள் உருவாக்கவும் இதில் கற்றுத்தரப்படும். இந்த கருவிகளை உருவாக்குவதுதான் மாணவர்களுக்கு புரொஜெக்ட்டாக வழங்கப்படும்.

கல்லூரி கொடுத்த விளக்கம்
இந்த நிலையில் அந்த கல்லூரி பல்கலைக்கழக நிர்வாகி 'கொல்பாசி' இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ''இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக ஏலியன்கள் உலகை தொடர்பு கொள்ளும். அப்போது இந்த படிப்பின் அவசியம் அனைவருக்கும் புரியும். மேலும் 10ல் இருந்து 15 வருடத்திற்குள் இந்த படிப்பை உலகில் நிறைய பேர் படித்து இருப்பார்கள்'' என்று கூறியுள்ளனர்.

ஆர்வம்
தற்போது இந்த படிப்பில் சேர்வதற்கு நிறைய மாணவர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதுவரை மட்டுமே 1000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் அந்த பல்கலைக்கழகத்திற்கு வந்து இருக்கிறது. மேலும் பலர் நேரடியாக அங்கு வந்து படிப்பு குறித்து விசாரணை செய்து செல்கின்றனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications