For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னா வேகம்.. அதுவும் கேமராவை தூக்கிக்கிட்டு.. ஆனா தம்பி நீ ஓட வேண்டிய களம் வேறய்யா!

ஓட்டப்பந்தய வீரர்களைவிட வேகமாக ஓடி அசத்தியுள்ளார் சீனா கல்லூரி மாணவர் ஒருவர்.

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில் நடந்த ஓட்டப்பந்தய போட்டியில் வீரர்களைவிட வேகமாக ஓடி, ஒளிப்பதிவாளர் அசத்திய வீடியோ சமூகவலைதளங்களில் அதிக கவனம் ஈர்த்து வருகிறது.

பொதுவாக விளையாட்டு போட்டிகளை ஒளிப்பதிவு செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. சரியான திட்டமிடல், சமயோஜிதபுத்தி, நல்ல தொழில்நுட்ப அறிவு, கடின உழைப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் ஒன்றாக சேர்ந்தால் தான் விளையாட்டு போட்டிகளை நல்லபடியாக ஒளிப்பதிவு செய்ய முடியும்.

சென்னை நகைக்கடையில் 5 லட்சம் பணம் பறிப்பு.. 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் சென்னை நகைக்கடையில் 5 லட்சம் பணம் பறிப்பு.. 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்

அதிலும் பைக் ரேஸ், கார் ரேஸ், கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளை ஒளிப்பதிவு செய்து நேரலை செய்வது என்பது இமாலய பிரயத்தனம் தான்.

வைரல்

வைரல்

ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டே கமெண்ட் செய்தபடி பார்த்து ரசிக்கும் விளையாட்டு போட்டிகளின் தொலைக்காட்சி நேரலைகளில் பலருடைய அபாரமான உழைப்பு ஒளிந்திருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒளிப்பதிவாளர் ஒருவரின் வீடியோ ஒன்றுதான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும் சம்பந்தப்பட்ட ஒளிப்பதிவாளர் தொழில்முறை ஒளிப்பதிவாளர் இல்லை.. அவர் ஒரு கல்லூரி மாணவர் என்பது தான் இங்கு அந்த வீடியோ வைரலானதற்கு மற்றுமொரு காரணம்.

கல்லூரி மாணவர்

கல்லூரி மாணவர்

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷாங்சி மாகாணத்தில் உள்ள டாதோங் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை ஒளிப்பதிவு செய்யும் பொறுப்பு அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் அந்த மாணவர் மிக உறுதியாக இருந்தார்.

 கேமராவுடன் ஓட்டம்

கேமராவுடன் ஓட்டம்

விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டி நடைபெற்றது. அதை ஒளிப்பதிவு செய்வதற்காக சுமார் 4 கிலோ எடைக்கொண்ட கிம்பால் எனப்படும் கேமராவுடன் கூடிய ஒளிப்பதிவு கருவியை தூக்கிக்கொண்டு ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரர்களைவிட வேகமாக ஓடி, அந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்தார் அந்த மாணவர்.

 பார்வையாளர்கள் ஆச்சர்யம்

பார்வையாளர்கள் ஆச்சர்யம்

ஓட்டப்பந்தய வீரர்களைவிட வேமாக ஓடிய அந்த மாணவரை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டு போய்விட்டனர். எடை கொண்ட கேமராவைத் தூக்கிக்கொண்டு வேகமாக ஓடும் அவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 'நல்லவேளை இவர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளவில்லை... இல்லையெனில் மற்றவர்களை விட வேகமா ஓடி பரிசை தட்டிச்சென்றிருப்பார்' என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

அடையாளம்

அடையாளம்

சமயங்களில் அப்படித்தான், போட்டிக் களங்களில் இருப்பவர்களை விட அதை வேடிக்கை பார்ப்பவர்கள் அதிக திறமைசாலியாக இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். எப்படியோ இந்த போட்டி மூலம் சம்பந்தப்பட்ட அந்தக் கல்லூரி மாணவரின் ஓடும் திறமை இப்போது உலகம் முழுவதும் தெரிய வந்து விட்டது.

English summary
In a viral video which was taken at a sports event held at Datong University in northern China’s Shanxi province a college student took everyone by surprise when he outran the sprinters on the racetrack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X