அபாயகரமான தாய் குகை.. உயிரைப் பணயம் வைத்த மீட்புப் பணி.. திரில் தகவல்கள்!
அபாயகரமான தாய் குகையில் உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்ட மீட்பு பணியினர்.
Recommended Video

பாங்காங்: மிகவும் குறுகலான குகை பாறை இடுக்குகளில் சிக்கிக் கொண்ட சிறுவர்களை உயிரை பணயம் வைத்து மீட்பு பணியினர் மீட்டனர்.
தாய்லாந்தில் உள்ள தாம் லுயாங் என்ற குகைக்கு பிறந்த நாள் கொண்டாட 12 கால்பந்து வீரர்களும், 1 பயிற்சியாளரும் கடந்த ஜூன் 23-ஆம் தேதி சென்றனர். அப்போது கனமழை பெய்ததால் அவர்கள் இருந்த குகையை வெள்ளம் சூழ்ந்தது.

இந்த வெள்ளநீரில் இருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் சிறுவர்களும் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் இதற்காக வீரர்கள் எத்தனை குறுகலான பாறை இடுக்குகளில் சிரமப்பட்டு சென்றுள்ளனர் என்பதை மீட்புப் படையினர் மூலம் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தாய்லாந்து சமீப காலமாக பல்வேறு அரசியல் குழப்பங்களில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளது. ஆனால் இந்த சிறார்கள் மீ்ட்பில் ஒட்டுமொத்த நாடும் ஓரணியில் திரண்டது.
மீட்புப் பணி நினைத்தது போல சாதாரணமாக இல்லை. மிகக் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. ஒவ்வொரு சிறுவரையும் மிகுந்த கவனத்துடன் மீட்டுக் கொண்டு வந்தனர். ஒவ்வொருவருக்கும் முகமூடி, நீச்சல் உடை, பூட்ஸ், ஹெல்மட் அணிவித்து மெதுவாக அழைத்து வந்துள்ளனர்.
ஒவ்வொரு பையனுக்கும் 2 கடற்படை நீர்மூழ்கி வீரர்கள் உடன் வந்துள்ளனர். ஒருவர் முன்னே செல்வார், இன்னொருவர் பையனின் பின்புறம் செல்வார். அந்தப் பையனுக்குரிய சுவாச சிலிண்டரை முன்னே செல்பவர் தூக்கிச் சென்றுள்ளார்.
8 மில்லிமீட்டர் அடர்த்தியான கயிறைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு சிறுவனையும் அழைத்து வந்துள்ளனர். மீட்புப் படையினரின் பணிகள் அசாத்தியமானவை மட்டுமல்லாமல் மிகவும் திரில்லானவை. சமீபத்தில் உலகில் எங்குமே இப்படி ஒரு மீட்புப் பணி நடந்ததில்லை என்பதால் மிகுந்த கவனம் பெற்று விட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications