அமெரிக்காவில் இப்படியும் நடக்குமுங்க.. கரப்பானுக்கு பயந்து வீட்டை கொளுத்திய பெண்.. தெருவே எரிந்தது!
அமெரிக்காவில் இருக்கும் சின்சினாட்டி நகரத்தில் பெண் ஒருவர் கரப்பான் பூச்சிக்கு பயந்து வீட்டையே கொளுத்தி இருக்கிறார்.
Recommended Video

சின்சினாட்டி: அமெரிக்காவில் இருக்கும் சின்சினாட்டி நகரத்தில் பெண் ஒருவர் கரப்பான் பூச்சிக்கு பயந்து வீட்டையே கொளுத்தி இருக்கிறார். இதன் காரணமாக அங்கு பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டு இருக்கிறது.
இதுபோன்ற சம்பவம் கடந்த சில நாட்களாக அமேரிக்காவில் அடிக்கடி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அவருக்கு மட்டும் இல்லாமல் அந்த பெண்ணின் தெருவில் இருக்கும் மற்ற வீடுகளும் சேதம் அடைந்து இருக்கிறது.
தற்போது அந்த பகுதியில் இருக்கும் கரப்பான் பூச்சிகளை விரட்டும் பணியில் சின்சினாட்டி நிர்வாகம் தீவிரமாக இறங்கி இருக்கிறது.

கரப்பான் பூச்சி
அமெரிக்காவில் மக்கள் அதிகமாக வசிக்கும் சின்சினாட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த விபத்து நடைபெற்று இருக்கிறது. முதலில் அந்த வீட்டில் இருந்த பெண்மணி அங்கு இருக்கும் கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்காக மருந்து அடித்துள்ளார். ஆனாலும் கரப்பான் பூச்சி போகவில்லை என்றதும் தீ பந்தத்தை எடுத்து வீட்டு சுவர்களில் காட்டி இருக்கிறார். ஆனால் அந்த பெண் கவனக்குறைவாக இருந்த காரணத்தால் வீடு தீ பற்ற துவங்கி இருக்கிறது.

தெரு முழுக்க பரவியது
முதலில் ஒரு வீட்டில் மட்டும் இருந்த தீ கொஞ்சம் கொஞ்சமாக பரவ தொடங்கியது. பின் சில மணி நேரத்தில் அந்த தெருவில் இருக்கும் மூன்று வீடுகளை தீ ஆக்கிரமித்தது. இந்த பெரும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி இருக்கிறார்கள். பின் நான்கு மணிநேர போராட்டத்திற்கு பின் தீ ஒரு வழியாக அணைக்கப்பட்டது.

மோசமான சேதம்
இந்த சம்பவத்தின் காரணமாக மூன்று வீடுகளும் மோசமாக சேதம் அடைந்தது. இதனால் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் 10க்கும் மேற்பட்டோருக்கு தீவிரமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது வீட்டில் இருந்த சேமிப்பு பணம் எரிந்த காரணத்தால் ஒரு கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது முறை
சின்சினாட்டியில் இந்த சம்பவம் இரண்டாவது முறையாக நடக்கிறது. அதே தெருவில் வசிக்கும் வேறு ஒரு ஆண் இதே போல் வீட்டை கொளுத்திவிட்டு இருக்கிறார். தற்போது இந்த இரண்டு தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவமனையில் உள்ளனர். மேலும் செஞ்சிலுவை இயக்கம் இவர்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications