For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு சொட்டு தண்ணீர் குடிக்கலை.. ஒரு வருஷமா.. உடம்பெல்லாம் பிரஷ்ஷா இருக்காம்.. கிட்னிக்கு நல்லதாம்!

Google Oneindia Tamil News

பாலி: இந்தோனேஷியா நாட்டில் உள்ள பாலியில் யோகா பயிற்சியாளர் ஒருவர் ஒரு ஆண்டாக தண்ணீர் குடிக்காமல் இருக்கிறார். இதனால் அவர் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக தெரிவிக்கிறார்.

பாலியை சேர்ந்தவர் சோஃபி பார்டிரிக். இவர் ஒரு யோகா பயிற்சியாளர். 35 வயதாகும் இவர் தண்ணீர் குடிப்பதால் கை, கால் முட்டிகளில் வலி, கண்களை சுற்றி வீக்கம், அலர்ஜி, ஜீரணமாவதில் பிரச்சினை ஆகியவை ஏற்பட்டதாக பார்டிரிக் தெரிவித்தார்.

இந்த கண் வீக்கத்தை சரி செய்ய மருத்துவரிடம் சென்றுள்ளார் பார்டிரிக். அப்போது அவரோ அறுவை சிகிச்சை செய்யலாம் என கூறியுள்ளார்.

ஒரு ஆண்டு

ஒரு ஆண்டு

அதில் பார்டிரிக்கிற்கு உடன்பாடு இல்லை. தனது நிலை குறித்து தனது தோழி ஒருவரிடம் கூறியுள்ளார். அவர்தான் இந்த டிரை பாஸ்டிங் எனப்படும் தண்ணீர் அருந்தாதது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து பார்டிரிக்கும் டிரை பாஸ்டிங் எனப்படும் முறையை ஒரு ஆண்டாக கடைபிடித்து வருகிறார்.

சுறுசுறுப்பு

சுறுசுறுப்பு

ஒரு நாளைக்கு 14 மணி நேரம் இது போல் தண்ணீர் குடிக்காமல் இருக்கிறார். அதாவது பழச்சாறு, காய்கறி, பழங்கள், இளநீர் ஆகிய தண்ணீரையே உட்கொண்டுள்ளார். இந்த முறையை ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே அவரது வீங்கிய கண்கள் சரியானது. தண்ணீர் குடிக்காததால் தான் சிறப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதாக தெரிவிக்கிறார்.

பழகுதல்

பழகுதல்

தண்ணீர் குடிக்காதது சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது என்கிறார். தண்ணீர் குடிக்காமல் இருந்தால் வாய் வறண்டுவிடும். இது ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. ஒரு கிளாஸ் தண்ணீராவது குடிக்க வேண்டும் என எண்ணத் தோன்றும். ஆனால் பழகிவிட்டால் எல்லாமே எளிதாகிவிடும் என்றார். நம் உடலில் 60 சதவீதம் தண்ணீரால் ஆனது என்பது நாண் அறிந்ததே.

எவ்வளவு தண்ணீர்

எவ்வளவு தண்ணீர்

மனிதன் குடிநீரின்றி ஒரு மனிதன் உயிர் வாழ்வது கடினமாகும். மேலும் அன்றாடம் 3 லிட்டர் தண்ணீரை மனிதன் அருந்துவது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த தண்ணீர் உடலில் உள்ள கெட்டக் கழிவுகளை வெளியேற்றும் என்கிறார்கள். ஆனால் இந்த பெண்ணோ தண்ணீர் அருந்தாதது மிகவும் புத்துணர்ச்சியாக கருதுவதாக கூறுகிறார்.

English summary
A Yoga Instructor Sophie Partik not drink water for a year and says that this type of dry fasting is good for health and even for kidneys.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X