உடம்புல ஒட்டு துணியில்லாம கர்ப்பத்தை காட்டி போட்டோவுக்கு செரீனா போஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க் : டென்னிஸ் வீராங்கணை செரீனா வாரஇதழ் ஒன்றிற்கு உடம்பில் ஒட்டு துணியின்றி கர்ப்பத்துடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்ததோடு, தனது காதலருடனான உறவு குறித்தும் தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கணை செரினா வில்லியம்ஸ் வேனிட்டி ஃபேர் என்ற ஆங்கில வாரப்பத்திரிக்கைக்கு ஆபாசமான போஸ் கொடுத்துள்ளார். அந்த இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள செரினா, கைகளால் மார்பை மூடியபடி உட்ம்பில் ஒட்டு துணியின்றி கர்ப்பத்தை காட்டுவது போல புரொபைல் போஸ் கொடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் செரினா வில்லியம்ஸ் தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும், இந்த ஆண்டு அவர் பங்கேற்க உள்ள அனைத்து போட்டிகளையும் ரத்து செய்தார். ஜனவரி மாதம் நடைபெற ஆஸ்திரேசிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று வெற்றி வாகை சூடுவேன் என்றும் செரினா கூறியிருந்தார்.

 காதல் மலர்ந்த கதை

காதல் மலர்ந்த கதை

செரினா வில்லியம்ஸ் ரெடிட் சமூக வலைதளத்தின் இணை இயக்குனர் ஒஹானியனை கடந்த 2015ம் ஆண்டு ரோமில் சந்தித்துள்ளார். அப்போது இருவரிடையே காதல் மலர, டிசம்பர் மாதத்தில் இவர்கள் திருமண பந்தத்தில் இணைய முடிவு செய்தனர். இந்நிலையில் குழந்தை பிறந்ததன் பிறகு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனராம்.

 கர்ப்பமா?

கர்ப்பமா?

தான் கர்ப்பமாக இருந்தது பற்றி செரினா வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா. நான் கர்ப்பமாக இருப்பேனோ என்று சந்தேகமே வரவில்லை, எனக்கு அது பற்றி எந்த புரிதலும் இல்லை. என்னுடைய தோழி கூறியதால் கர்ப்ப கால முதல் பரிசோதனை செய்தேன்.

அச்சம்

அச்சம்

ஆனால் அந்த சோதனை செய்ததை மறந்து ஒரு ஸ்பான்சர் போட்டோ ஷூட்டிற்காக புகைப்படம் எடுக்க தயாராகிக் கொண்டிருந்தேன். எதேச்சையாக பார்த்த போது தான் கர்ப்பம் சோதனையில் உறுதியானதை தெரிந்து கொண்டேன். ஆனால் என்னால் நம்ப முடியவில்லை, கர்ப்பமாக இருந்தால் நான் எப்படி இந்த ஆண்டு ஆஸ்திரேலிய விம்பிள்டன் போட்டியில் பங்கேற்பேன் என்று அச்சமைடைந்தேன்.

 உறுதியான கர்ப்பம்

உறுதியான கர்ப்பம்

இதனால் என்னுடைய தோழியை மீண்டும் கடைக்கு அனுப்பி மேலும் 6 பரிசோதனை சாதனங்களை வாங்கி வந்து பரிசோதனை செய்து பார்த்தேன். அனைத்தும் கர்ப்பத்தை உறுதி செய்தன. நான் எப்படி ஒரு குழந்தையை வளர்க்கப் போகிறேன் என்ற அச்சம் வரத் தொடங்கியுள்ளது" என்று செரினா பேட்டியில் கூறியுள்ளார்.

 டுவிட்டரில் போட்டோ போஸ்ட்

டுவிட்டரில் போட்டோ போஸ்ட்

இதனிடையே வேர்னிட்டி ஃபேரின் கவர் போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்ன குழந்தையாக இருக்கும் என்று கேட்டுள்ளார். என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் அதனால் தான் உங்கள் கருத்தை கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.

 இதெல்லாம் ஓவர்

இதெல்லாம் ஓவர்

கருத்து கேட்பதெல்லாம் சரி, அதற்காக இப்படியா போட்டோவிற்கு போஸ் கொடுப்பது. என்னதான் மிகப்பெரிய பிளேயரா இருந்தாலும் இப்படி கர்ப்பமா இருக்கும் போது போட்டோவிற்கு ஹாட் போஸ் கொடுப்பதெல்லாம் கொஞ்சம் ஓவரு சொல்றது புரியுது. ஆனா என்ன பண்றது அவங்க நாட்டுல அது சகஜம் போல.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Serena Williams unveiled her pregnant body in a nude for Vanity Fair cover photo and posted it on her web page with the question of what do you think it is boy or girl baby
Please Wait while comments are loading...