புற்று நோயைக் குணப்படுத்த “வைரஸ் இம்யுனோ தெரபி”- விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு
லண்டன்: லண்டனைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் சளியை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளைக் கொண்டு புற்று நோயைக் குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறையை கண்டு பிடித்திருக்கிறார்கள்.
ஆட்கொல்லி நோயான புற்று நோயிலிருந்து மனிதனை காப்பாற்ற இன்று வரை முறையான சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை.
உடல் உள் உறுப்புகளிலும் தோலிலும் ஏற்படும் புற்று நோய்கள் பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.

எதிர்த்துப் போராடும் வைரஸ்:
சளிக்கு காரணமான வைரஸ் கிருமிகள், உயிருக்கு ஆபத்து விளைவிக்காதவை. இவற்றை மரபணு மாற்றத்தின் மூலமாக புற்று நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் வகையில் விஞ்ஞானிகள் மாற்றியிருக்கிறார்கள்.

வைரஸ் இம்யுனோதெரபி:
"வைரஸ் இம்யுனோதெரபி" எனப்படும் இச்சிகிச்சை முறையில் மரபணு மாற்றம் பெற்ற வைரஸ். இரண்டு வழிகளில் புற்று நோயை எதிர்த்து போராட உதவுகிறது.

இயற்கையான எதிர்ப்பு சக்தி:
முதலாவதாக கேன்சரை ஏற்படுத்தும் கிருமிகளில் தங்கி அவற்றை அழிக்கிறது. இரண்டாவதாக உடம்பில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி புற்று நோய் குணமாக உதவுகிறது.

தீவிரமான ஆராய்ச்சி:
புற்று நோய்க்கு முறையான சிகிச்சை குறித்து தீவிரமான ஆராய்ச்சி உலகெங்கும் நடந்து வரும் வேளையில் இச்செய்தி மருத்துவ உலகிற்கு ஆறுதலான விஷயமாக இருக்கிறது.

நல்ல முன்னேற்றம் உண்டு:
ஏற்கனவே நடைமுறையில் உள்ள புற்று நோய்க்கான சிகிச்சைகளுடன், இச்சிகிச்சை இணைந்து அளிக்கப்படும் போது நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பரிசோதனையில் வெற்றி;
இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள், "வைரஸ் இம்யுனோ தெரபி" க்கு உட்படுத்தப்பட்ட தோல் புற்று நோயாளிகளிடம், நோயின் தாக்கம் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். எதிர்காலத்தில் இது புற்று நோய்க்கு மிகச் சிறந்த மாற்றுச் சிகிச்சையாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications