"நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா".. ஓனருக்காக ஆஸ்பத்திரி வாசலில் பல நாள் காத்திருக்கும் நாய்..!
பாசக்கார நாய், தன் எஜமானருக்காக மருத்துவமனை வாசலில் காத்துள்ளது
இஸ்தான்புல்: ஓனருக்கு திடீரென உடம்பு சரியில்லை.. இதனால் அந்த வீட்டுநாய் துடிதுடித்து போய்விட்டது.. இதையடுத்து, அந்த வளர்ப்பு நாய் செய்த சம்பவம்தான் இணையத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சிமல் சென்டர்க் என்ற பெண்மணி வசித்து வருகிறார்.. இவர் ரெட்ரீவர் வகையினை சேர்ந்த ஒரு நாயை ஆசை ஆசையாக வளர்த்தும் வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதாவது கடந்த 14-ம்தேதி அந்தம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விடவும், ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டது.
ஆம்புலன்ஸில் சிமல் சென்டர்க்கை ஏற்றுவதை பார்த்த அந்த வளர்ப்பு நாய் இங்குமங்கும் சுற்றி சுற்றி வந்தது.. பிறகு, அந்த பாசக்கார நாய், ஓனருக்கு என்ன ஆச்சோ என்று பதைபதைத்து போய், பல கிலோமீட்டருக்கு ஆம்புலன்ஸ் பின்னாடியே ஆஸ்பத்திரி வரை ஓடி வந்தது.

ஆம்புலன்ஸில் இருந்து அவரை இறக்கி சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.. இப்போதும் அவர் எப்போது வீட்டுக்கு வருவார் என்று நாய் காத்திருக்கிறது.. ஒவ்வொரு நாள் காலையிலும் ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்துவிடுகிறது.. வாசலிலேயே சிமல் சென்டர்க்கின் வருகைக்காக காத்திருக்கிறது.. அந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதை விரட்டினாலும் அதனை அந்த நாய் கண்டுகொள்வதே கிடையாது..
ஒருமுறை அந்த நாயை கொண்டு செல்ல சென்டர்க்கின் மகள் முயற்சி செய்தார்.. அப்போதும் மறுபடியும் மறுபடியும் ஆஸ்பத்திரிக்கே வந்து வாசலில் நின்று கொள்கிறது. ஆம்புல்ன்ஸ் பின்னாடியே ஓடிவரும் இந்த நாய் வாசலில் காத்திருக்கும் வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Dog chases ambulance as it takes its owner to the hospital pic.twitter.com/Rm4ESMgLWS
— Reuters (@Reuters) June 11, 2021
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications