துப்பாக்கி இருந்தால் என்ன?.. மைக்கை நீட்டிய ஆப்கான். பெண் செய்தியாளர்.. தாலிபானிடம் இவ்வளவு மாற்றமா?
காபூல்: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி உள்ள நிலையிலும் இன்று பெண் செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் பலர் அந்நாட்டில் செய்தி வாசித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. தாலிபான்களுக்கு அஞ்சாமல் பெண் ஊடகவியலாளர்கள் துணிச்சலாக தங்கள் பணிகளை மேற்கொண்டது வரவேற்பை பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அந்நாட்டின் பெண் சுதந்திரம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. 2001க்கு முன் தாலிபான்கள் ஆட்சி புரிந்த 6 வருடங்கள் ஆப்கானிஸ்தானில் இப்போது இருண்ட காலமாக பார்க்கப்படுகிறது. தாலிபான் படைகள் அங்கு மீண்டும் ஆட்சிக்கு வருகிறது என்றவுடன் மக்கள் எல்லோரும் கடும் பதற்றத்திற்கும், அச்சத்திற்கும் உள்ளாகி இருக்கிறார்கள்.
தாலிபான்கள் ஆட்சிக்கு கீழ் ஆப்கானிஸ்தானில் பெண்கள் அப்போது மிக மோசமாக நடத்தப்பட்டனர். பெண்களுக்கான கல்விகள் மறுக்கப்பட்டது. பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுமதிக்கப்படவில்லை. பெண்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர்.

மோசமான நிலை
ஏன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் இருந்த போது கூட தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தது. மலாலா மீதான தாக்குதல் தொடங்கி பல்வேறு இடங்களில் பெண்களுக்கு கல்வி வழங்குவதில் தாலிபான்கள் தொடர்ந்து எதிர்ப்பு நிலைப்பாட்டையே எடுத்து வந்தன. அதோடு பெண்கள் கண்டிப்பாக பர்தா அணிய வேண்டும். கண்கள் கூட தெரிய கூடாது. பெண்கள் வெளியே செல்லும் போது கணவருடன் அல்லது வீட்டு ஆண்களுடன் செல்ல வேண்டும்.

பெண்கள் வேலை
பெண்கள் வேலை வாய்ப்புகளை பெற கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் போட்டு வந்தது. அவ்வளவு ஏன் அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய பின் ஆப்கானிஸ்தானில் கொஞ்சம் கொஞ்சமாக தாலிபான்கள் வென்றது. இதில் தாலிபான்கள் கைப்பற்றிய இடங்களில் எல்லாம் இதே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தாலிபான்களின் இந்த கடுமையான விதிகளால்தான் அங்கிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். முக்கியமாக பெண்கள் தாலிபான்களுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

செய்தி
தற்போது காபூலையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் அவர்கள் என்ன மாதிரியான கடுமையான சட்டங்களையும் வேண்டுமானாலும் விதிக்க முடியும். இதனால் இன்றைய பொழுது ஆப்கான் பெண்களுக்கு அச்சத்தோடுதான் விடிந்தது. தாலிபான் தங்கள் வீட்டு கதவை தட்டி கடும் உத்தரவுகளை பிறப்பிக்குமோ, தங்கள் சுதந்திரம் பறிக்கப்படுமோ என்ற அச்சத்தோடுதான் அவர்களுக்கு நாளே விடிந்தது. ஆனால் காலையில் எழுந்து டிவியை ஆன் செய்தவர்களுக்கு பெரிய ஆச்சர்யம். ஆப்கானிஸ்தானின் பிரபல டோலோ (TOLO) செய்தி சேனலில் இன்று காலை செய்தியையே பெண் செய்தியாளர்தான் வாசித்தார்.
Recommended Video

பெண் செய்தியாளர்கள்
ஆம் டோலோ செய்தி நிறுவனம் இன்றைய செய்தி நாளை பெண் செய்தியாளருடன் துணிச்சலாக தொடங்கியது. மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக செய்தி சேனல் இந்த முடிவை எடுத்துள்ளது. நேற்று காபூலை பிடித்த உடனே இந்த செய்தி சேனலின் தலைமையகத்திற்கு தாலிபான்கள் சென்றனர். அங்கு நீண்ட நேரம் இவர்கள் ஆலோசனை செய்தனர். அந்த ஆலோசனைக்கு பின்பு இன்று பெண் செய்தி வாசிப்பாளருடன் நிகழ்ச்சிகளை டோலோ நிறுவனம் தொடங்கி உள்ளது. முழுதாக முகத்தை மூடாமல் காது, தலையை மட்டும் மூடும் வகையில் இவர் புர்கா அணிந்து செய்தி வாசித்தார்..

மாற்றம்
அவர்களின் ஆட்சி திட்டங்கள் குறித்த கேள்விகளை டோலோ நிறுவன பெண் செய்தியாளர் எழுப்பினார். இதற்கு தாலிபான்கள் அமைதியாக பதில் அளித்தனர். தாலிபான்களின் இந்த மாற்றம் கவனிக்கதக்க ஒன்றாக மாறியுள்ளது. இது போக டோலோ உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவன பெண் பத்திரியாளர்கள் சாலைகளில், பொது இடங்களில் நின்று சுதந்திரமாக பேசி, செய்தி வெளியிட்டனர். பொது இடங்களில் இருந்து இவர்கள் கொடுத்த நியூஸ் பைட்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இது வரவேற்கத்தக்க மாற்றமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications