ஆப்கானிஸ்தான்: "பறவைகள் தற்கொலைப் படை"யை ஏவும் தலிபான்கள்!!
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய போர் வியூகமாக மிகப் பெரிய பறவைகளை தற்கொலைப் படைகளாக அனுப்பி தாக்குதல் நடத்தி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படைகள் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேற உள்ளன. இந்த நிலையில் அண்மைக்காலமாக தலிபான் தீவிரவாதிகள் ஆப்கான் படைகள் மீது தாக்குதலை அதிகரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆப்கானின் வடக்குப் பகுதியில் பார்யப் என்ற பகுதியில் பெரிய பறவை ஒன்று பறந்து சென்றது. ஆனால் அந்தப் பறவை வெளிநாட்டுப் பறவையாக இருந்ததால் சந்தேகம் அடைந்த பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டனர்.
அப்போது படுகாயத்துடன் விழுந்த பறவையை சோதித்த பாதுகாப்புப் படை அதிகாரிகள் அதன் தலையில் ஜிபிஎஸ் கருவி, சிறிய ரக கேமரா ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன.
மேலும் அந்த பறவையின் இறகுகளில் வெடிகுண்டும் கட்டப்பட்டிருந்தது. தலிபான் தீவிரவாதிகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டுடன் உள்ள பறவையை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் போலீஸ் மூத்த அதிகாரி அகமதுல்லா கூறியபோது, தலிபான் தீவிரவாதிகள் இதற்கு முன்பு கழுதைகளை தற்கொலைப் படையாக பயன்படுத்தினர். தற்போது முதல்முறையாக பறவை மூலம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.
இதேபோல் ஏராளமான பறவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு புதிய தற்கொலைப் படையை உருவாக்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications