விராட் கோலி "இப்படி" செய்திருக்க கூடாது.. தாலிபான் தலைவர் சொன்ன வார்த்தை! உற்று பார்க்கும் ரசிகர்கள்
காபூல்: நமது அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்கள் பிறப்பிக்கும் பல்வேறு உத்தரவுகள் மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்புவதாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே தாலிபான் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் விராட் கோலிக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கிரிக்கெட்டிற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவரான அனாஸ் ஹக்கானி என்பவர் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு திடீர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

தாலிபான் தலைவர்
தீவிர கிரிக்கெட் ரசிகரான அனாஸ் ஹக்கானி, இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவுகள் குறித்து சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். கோலியும் ரோஹித்தும் மே 2025ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்குச் சற்று முன்னதாக ஓய்வு அறிவிப்பு வெளியானது. இது குறித்தே அனாஸ் கருத்து கூறியிருக்கிறார்
விராட் கோலியின் ஓய்வு முடிவு தன்னை ஆச்சரியப்படுத்தியதாகத் தெரிவித்த ஹக்கானி, அதை அவர் வாபஸ் பெற வேண்டும் என கூறியுள்ளார். மேலும், விராட் கோலி தனது 50 வயதைத் தொடும் வரை தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் அதுவே தனது விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கோரிக்கை
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ரோஹித்தின் டெஸ்ட் ஓய்வு நியாயமானது தான். ஆனால் கோலியின் ஓய்வுக்குப் பின்னால் உள்ள காரணம் எனக்குப் புரியவில்லை. உலகில் கோலி போன்ற தனித்துவமானவர்கள் மிகச் சிலரே இருக்கிறார்கள். அவர் 50 வயது வரை விளையாட முயல வேண்டும் என்பதே என் ஆசை.
ஒருவேளை இந்திய ஊடகங்களின் கடுமையான விமர்சனங்களால் கோலி விரக்தியடைந்திருக்கலாம். ஆனால், அவருக்கு இன்னும் நேரம் இருந்தது. சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ரன்களை ஜோ ரூட் எப்படித் துரத்துகிறார் என்பதை நீங்கள் பார்க்கலாம். அதுபோல விராட் கோலியும் விளையாட வேண்டும்" என்றும் ஹக்கானி குறிப்பிட்டார்.
விராட் கோலி
36 வயதான கோலி, கடந்த மே 12ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 10,000 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட 770 ரன்கள் மட்டுமே இருந்தது.. 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை கோலி எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென ஓய்வை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. கோலியின் ஓய்வுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக தான் ரோஹித் சர்மாவும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இரு நட்சத்திர வீரர்களின் ஓய்வைத் தொடர்ந்து 25 வயதான சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. மூத்த வீரர்கள் பெரியளவில் இல்லாததால் கில் மீது இங்கிலாந்து தொடரில் அழுத்தம் இருந்தது. ஆனால், அதையும் தாண்டி சிறப்பாகச் செயல்பட்ட அவர், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-2 என்ற சமன் செய்தார்.
அடுத்து என்ன
கோலியும் ரோஹித்தும் ஏற்கனவே டி20 தொடரில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இருவரும் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். தற்போது ஆசிய கோப்பை நடந்து வரும் சூழலில், அதைத் தொடர்ந்து அக்டோபரில் இந்தியா ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. அதில் இருவரும் மீண்டும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications