ஆரம்பிச்சாச்சு.. தாலிபான்கள் போட்ட முதல் உத்தரவு இதுதான்.. கலங்கி போன பெண்கள்.. அடுத்து என்னாகும்?
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டுப்பாட்டினை தாலிபன்கள் விதித்துள்ளனர்
காபூல்: பல்கலைக்கழகங்களில் மாணவர்களும், மாணவியர்களும், தனித்தனி கிளாஸ் ரூம்களில் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தாலிபான்கள் கொண்டு வந்துள்ளனர்.
Recommended Video
இப்போது நாட்டை ஆப்கான்கள் கைப்பற்றிய நிலையில், அது அங்குள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், தாலிபன்களின் ஆட்சியில் பெண்களும், பெண் குழந்தைகளும் என்ன பாடுபடப் போகின்றனரோ என்ற கலக்கமும், கவலையும்தான் உலக மக்களை கவ்வியுள்ளது..
காரணம், அவர்கள் தங்கள் நாட்டு பெண்களை கடந்த காலங்களில் நடத்திய விதம் அந்த அளவுக்கு மோசமாக இருந்தது.

கட்டுப்பாடு
குறிப்பாக, பெண்கள் புர்கா அணியாமல் வெளியே வரக்கூடாது, ரத்த உறவு கொண்ட ஆண்களின் துணையுடன்தான் அவர்கள் தெருவில் நடமாட வேண்டும் என்ற உத்தரவை போட்டார்கள்.. மேலும் பெண்கள் ஹீல்ஸ் அணியவே கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். ஏனென்றால், அவர்கள் நடக்கும்போது அந்த ஹீல்ஸிலிருந்து வரும் சத்தம் ஆணின் கவனத்தை சிதறடித்து விடும் என்பதால்தான்..

ஏர்போர்ட்
அதுமட்டுமல்ல, பொதுவிடங்களில் பெண்கள் சத்தமாக பேசக்கூடாது, பெண்களின் குரலை அந்நியர்கள் கேட்டுவிடக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கவும்தான், இப்போது உயிரை கையில் பிடித்து கொண்டு தப்பி செல்ல காபூல் ஏர்போர்ட்டில் குவிந்து வருகிறார்கள்... இதனால் பதற்றம் நீடித்து கொண்டே இருக்கிறது. எனினும் புதிய அமைச்சரவையை உருவாக்கும் முயற்சியில் தாலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் போன்ற முக்கிய துறைகளை நிர்வகிக்கும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

தாலிபான்கள்
பெண்கள் வேலைக்காக வீட்டுக்கு வெளியே செல்லக் கூடாது என்றும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதே அவர்களுக்குப் பாதுகாப்பானது என்றும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் சில தினங்களுக்கு முன்பு சொல்லி இருந்தார்.. மேலும், தாலிபான் பாதுகாப்பு படையினருக்குப் பொது இடங்களில் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதற்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மாணவர்கள்
இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. ஆப்கன் அரசின் முதல் அதிரடியாக, பல்கலைக்கழகங்களில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் ஒன்றாக படிக்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்... இஸ்லாமிய சட்டப்படி மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனி வகுப்புகளில்தான் பாடம் நடத்தப்படுமாம்..

பெண்கள்
இந்த தகவலை ஆப்கனின் கல்வித்துறையை தன் பொறுப்பில் கவனித்து வரும் சியார் கான் யாத் தெரிவித்துள்ளார். அதேபோல, கந்தஹாரில், டிவி மற்றும் ரேடியோவில் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியாம்.. அதனால்தான் தடை விதித்துள்ளனர்..

கலைஞர்கள்
இப்போது என்றில்லை, அந்த காலத்தில் இருந்தே பெண் பாடகர்கள், பெண் ஓவியர்கள் என்றால் தாலிபன்களுக்கு பிடிக்காதாம்.. அதனால்தான் அத்தகைய கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.. அப்படித்தான், அந்தாரப் என்ற மாகாணத்தில் ஃபாசவத் என்ற நாட்டுப்புற பாடகரையும் சுட்டுக் கொன்றனர்... இனி அடுத்தடுத்து தாலிபான்கள் என்ன செய்ய போகிறார்களோ என்ற கலக்கம் அங்குள்ள மக்களுக்கு மேலும் அதிகரித்துள்ளது..!












Click it and Unblock the Notifications