பாகிஸ்தானின் அஸ்திவாரத்தையே அசைக்கும் தாலிபான்.. வசமாக வைத்த ஆப்பு.. சுற்றி வளைக்கும் படைகள்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் தாலிபான் மற்றும் தாலிபானின் கிளை படைகள் சுற்றி வளைக்க தொடங்கி உள்ளன. இதனால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தாலிபான் படைகள் பாகிஸ்தான் எல்லையில் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றன.
தாலிபான் தங்கள் மீதான பாகிஸ்தானின் தாக்குதலை கடுமையாக எதிர்த்து உள்ளது. தாலிபான் மீதான இந்த தாக்குதல்களை ஆப்கானிஸ்தான் அரசு கடுமையாக கண்டித்து உள்ளது.

பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலைக் கண்டித்த ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம், இஸ்லாமிய எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் மீதான இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகள், பெண்கள், குடும்பங்களை குறி வைத்து தாக்கி உள்ளனர். இது மிருகத்தனமான தாக்குதல். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வாகாது.
இதை ஆப்கானிஸ்தான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. நாங்கள் இதற்கு பதிலடி கொடுக்காமல் இருக்க மாட்டோம். இந்த கோழைத்தனமான செயலுக்கு பதிலடி கொடுப்போம். எங்கள் பகுதிகளை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வோம். எங்கள் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதற்கு உரிய பதிலடி தருவோம் என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் தாலிபான் மற்றும் தாலிபானின் கிளை படைகள் சுற்றி வளைக்க தொடங்கி உள்ளன.
பாகிஸ்தான் - தாலிபான் மோதல் - என்ன நடந்தது?:
ஆப்கானிஸ்தானில் உள்ளது போலவே பாகிஸ்தானில் தாலிபான் அமைப்பு உள்ளது. இந்த தாலிபான் அமைப்பின் ரகசிய தாங்கும் இடங்கள், தளவாடகங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளது.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) என்று பாகிஸ்தானின் தலிபான்கள் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி பாகிஸ்தான் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வழக்கம். ஆப்கானிஸ்தானில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகளுக்கும் - இவர்களுக்கும் ஆகாது. பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இவர்களுக்கும் கூட மோதல் உள்ளது.
பாகிஸ்தானில் தலிபான் ஆட்சியை நிறுவ வேண்டும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கியெறிவதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். அதற்காக, பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாகத் தாக்கி, அரசியல்வாதிகளைக் கொன்று பாகிஸ்தானை சீர்குலைக்கும் பணியே டிடிபி அமைப்பின் முக்கிய குறிக்கோள் ஆகும். பாகிஸ்தானில் தாலிபான் ஆட்சியை கொண்டு வந்து இரண்டு நாடுகளை ஒன்றாக்குவதே இவர்களின் முக்கிய நோக்கம்.
பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தாக்குதல் நடத்துவதாக அவ்வப்போது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இவர்களுக்கு சொந்தமான தளவாடங்களில் திடீரென பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தளவாட பகுதி என்று கருதப்படும் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வான்வழித் தாக்குதல்கள் காரணமாக 15 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்தன, பலர் கடுமையாக காயம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கும் பட்சத்தில் அது இரண்டு நாட்டு மோதலாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications