Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்லாமாபாத்தை எங்களின் 2வது தலைநகராக்கி விடுவோம்.. உஷாரா இருங்க.. பாகிஸ்தானுக்கு தாலிபான் ‛வார்னிங்’

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஏற்கனவே எல்லை பிரச்சனை உள்ள நிலையில் முகமது அலி ஜின்னாவுக்கு 'குவாய்ட்-இ-ஆசம் ' என்ற பட்டத்துடன் அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ‛‛இஸ்லாமாபாத்தை எங்களின் 2வது தலைநகராக்கி விடுவோம்'' என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர். தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கும், அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இடையே சமீப காலமாக உரசல் போக்கு நிலவி வருகிறது.

எல்லை பிரச்சனை, பயங்கரவாத அச்சுறுத்தல் தான் இதற்கு பிரதான காரணமாக உள்ளது. மேலும் இருநாட்டின் எல்லைகளிலும் அடிக்கடி வெடிகுண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இதனால் இருநாட்டின் எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

பாகிஸ்தான் அச்சுறுத்தும்

பாகிஸ்தான் அச்சுறுத்தும்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சி நடத்தி வரும் நிலையில் அங்கு பசி, பட்டினியால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உலக நாடுகளில் பலவும் ஆப்கானிஸ்தானின் தாலிபான்களை இன்னும் அங்கீகரிக்காத நிலையில் அந்த நாட்டில் பொருளாதார பிரச்சனையும் உள்ளது. இதற்கு மத்தியில் தான் ஆப்கானிஸ்தானில் அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. இது ஒருபுறம் இருக்க எல்லையில் பாகிஸ்தானும் அச்சுறுத்தி வருகிறது.

மிரட்டிய ஆப்கானிஸ்தான்

மிரட்டிய ஆப்கானிஸ்தான்

இதனால் தாலிபான்கள் கோபத்தின் உச்சத்துக்கு சென்றுள்ளனர். இதனால் தான் பாகிஸ்தானுக்கு கடுமையாக தாலிபான்கள் எச்சரித்துள்ளனர். அதன்படி பாகிஸ்தான் தங்களுக்கு எதிராக செயல்பட்டால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும். தற்கொலைப்படை தாக்குதலுக்கான ஆட்கள் எங்களிடம் உள்ளனர் என பகிரங்கமாக எச்சரித்துள்ளனர்.

மிரட்டல் வீடியோவில் இருப்பது என்ன?

மிரட்டல் வீடியோவில் இருப்பது என்ன?

இதுபற்றி தாலிபான் நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரியான அப்துல் பாசிர் ஷெர்சாடி ‛பாஷ்தோ' மொழியில் பேசும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதில் அந்த அதிகாரி, ‛‛ஆப்கானிஸ்தானுக்கு 5,000 ஆண்டுகால வரலாறு உள்ளது. இதனை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும், பாகிஸ்தானை வெறுக்கிறார்கள். பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்மறை எண்ணத்துடன் செயல்பட்டால் பாகிஸ்தானுக்கு தற்கொலைப்படை தாக்குதல் நடத்த அதற்கான நபரை அனுப்புவோம். அதோடு இஸ்லாமாபாத்தை எங்களின் 2வது தலைநகராக மாற்றுவோம்'' என மிரட்டல் விடுத்துள்ளார்.

மிரட்டலுக்கான இன்னொரு காரணம்

மிரட்டலுக்கான இன்னொரு காரணம்

முன்னதாக பாகிஸ்தான் நாட்டின் தந்தையாக கருதப்பட்டு வரும் முகமது அலி ஜின்னாவுக்கு பெரிய தலைவர் என்பதை குறிக்கும் வகையிலான 'குவாய்ட்-இ-ஆசம் ' என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்துக்கு மட்டும் தான் இது பொருந்தும் எனக்கூறி ஆப்கானிஸ்தானில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேலும் அந்த பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கூறி வந்த நிலையில் தற்போது இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+