ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸால் 3 லட்சம் பேர் இறக்க நேரிடும்.. ஆய்வறிக்கையால் அதிர்ச்சி தகவல்
வகாண்டா: ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸால் 3 லட்சம் பேர் இறக்க நேரிடும் என புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
Recommended Video
ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்த நாடுகள் கொரோனா பரவும் மையமாக மாறும் அபாயமுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.
ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 18 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் கடந்த வாரங்களில் எத்தனை மோசமான பாதிப்பை கொண்டிருந்ததோ அந்த அளவுக்கு ஆப்பிரிக்காவின் நிலை உள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை காணும் போது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இறப்புகள்
இங்கு கொரோனாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத மிக மோசமான கட்டத்தில் நிச்சயம் ஆப்பிரிக்க நாடுகளில் 33 லட்சம் கொரோனா இறப்புகளை ஆப்பிரிக்க நாடுகள் சந்திக்க நேரிடும் என ஆப்பிரிக்காவுக்கான ஐநா பொருளாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

12.2 கோடி
மேலும் என்னதான் தீவிரமாக சமூக விலகல் கடைப்பிடித்தாலும் அந்த கண்டத்தில் 12.2 கோடி பேர் பாதிக்கப்படுவர். கொரோனா பரிசோதனை, பாதுகாப்பு உபகரணங்கள், சிகிச்சைக்காக 4400 கோடி டாலர் நிதி தேவைப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, ஐவரி கோஸ்ட், கேமரூன், கானா ஆகிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

உபகரணங்கள்
அங்கு மருத்துவ வசதிகளோ, தேவையான உபகரணங்களோ இல்லை. செயற்கை சுவாசக் கருவியும் சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்காததாலும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனாவால் 3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டங்கள்
ஆப்பிரிக்கா கண்டங்களில் எச்ஐவி, காசநோய் போன்றவை அதிகரித்து காணப்படுகின்றன. இங்குள்ள மக்களில் சில பேருக்கு காய்ச்சல், இருமல் என மிதமான அறிகுறி தென்படுகிறது. வயதானோருக்கு நிமோனியாவை ஏற்படுத்தும் கொரோனா உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. வறுமை, நெரிசலான நகர்ப்புற அமைப்புகள், சுகாதார பிரச்சினைகளே ஆப்பிரிக்கா வைரஸால் பாதிப்பட்டதற்கு காரணம் என ஐநா தெரிவித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications