டிரம்ப் போட்டுத்தந்த ஆபத்தான ரூட்! இந்தியாவுக்கு நெருக்கடி தர ஐரோப்பாவும் முடிவு! ஒன்று கூடிட்டாங்க
சென்னை: அமெரிக்காவை தொடர்ந்து தற்போது ஐரோப்பாவும் இந்தியாவின் வரி கொள்கையை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளது. இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக விஸ்கி, ஒயின் மற்றும் கார்கள் போன்ற முக்கிய ஏற்றுமதிகள் மீதான வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி உள்ளது.
இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்க மீது அதிக வரிகளை விதிக்கின்றன. 10-25 சதவிகிதம் வரை பல பொருட்கள் மீது இரண்டு நாடுகளும் அமெரிக்கா மீது விதிக்கின்றன. இப்போது பரஸ்பர விதிகள் காரணமாக இதே அளவிலான விதிகளை இந்தியா , தாய்லாந்து மீது அமெரிக்கா விதிக்கும். இப்போது 10%க்கும் கீழ்தான் இந்தியா, தாய்லாந்து பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கிறது. அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா விதிக்கும் சராசரி விகிதம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை விட 10 சதவீத புள்ளிகளுக்கும் அதிகம் ஆகும்.

பதிலுக்கு வரி விதிக்கும் அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபரின் வர்த்தக போர் காரணமாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை இரசாயனங்கள் துறை, உலோக பொருட்கள் துறை, நகைகள் துறை, மேலும் ஆட்டோமொபைல்கள் துறை, மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் துறை ஆகியவை பாதிக்கப்படும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கியமாக இரசாயனங்கள், உலோக பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவில் இருந்து செய்யப்படும் ஆட்டோமொபைல் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இந்த ஏற்றுமதி 15 சதவிகிதம் வரை பாதிக்கும், மருந்து ஏற்றுமதி 30 சதவிகிதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
வரி விதிக்கும் ஐரோப்பா
அமெரிக்காவை தொடர்ந்து தற்போது ஐரோப்பாவும் இந்தியாவின் வரி கொள்கையை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளது. இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக விஸ்கி, ஒயின் மற்றும் கார்கள் போன்ற முக்கிய ஏற்றுமதிகள் மீதான வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி உள்ளது.
ஏற்கனவே ஒன்பது சுற்று விவாதங்கள் முடிவடைந்த நிலையில் இந்தியாவிற்கு ஐரோப்பா இந்த நெருக்கடியை தந்துள்ளது.
இந்தியாவின் பொருட்களுக்கு நாங்கள் விதிக்கும் வரியை விட.. எங்களின் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரி அதிகம் உள்ளது. முக்கியமாக விஸ்கி, ஒயின், கார்கள் மற்றும் பிற முக்கிய பொருட்கள் மீதான சுங்க வரிகளை இந்தியா அதிகம் விதிக்கிறது. இதை இந்தியா குறைக்க வேண்டும் என்று ஐரோப்பா நெருக்கடி தந்துள்ளது.












Click it and Unblock the Notifications