''கிட்னிய விக்கலன்னா என் பொண்ண விக்கணும்..'' - பட்டினியால் ஆப்கானிஸ்தானில் தொடரும் அவல நிலை!

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றதும், ஆப்கன் மக்கள் வறுமையால் வாடி வருகின்றனர். சிலர் வறுமையை வெல்ல உடல் உறுப்புகளை விற்று வருகிறார்கள் ஆப்கானிஸ்தான் மக்கள்.

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபின் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியால் குழந்தைகள் அல்லது உடல் உறுப்புகளை விற்கும் மோசமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

2001ஆம் ஆண்டில் அமெரிக்க படைகள், ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த தாலிபனை அதிகாரத்திலிருந்து நீக்கிய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் தாலிபன்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அந்த நாட்டில் இருந்து வெளிநாட்டுப் படைகள் விலகுவதாக அறிவித்தன.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் கையகப்படுத்திய பிறகு, பெண்கள் வீட்டை விட்டு தனியாக செல்லக்கூடாது. ஆண்கள் துணையோடு தான் வெளியே செல்ல வேண்டும் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளக் கூடாது எனக் கூறியவர்கள் பெண்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பையும் தடுத்துள்ளனர். தொடர்ந்து அந்நாட்டு சிறுமிகளுக்கு கல்வி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கான பள்ளிகூடங்களையும் மூடி வைத்துனர்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான உணவுப் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களுக்கு முன்னதாகவே அங்கு 80 சதவீத மக்கள் போதுமான உணவு கிடைக்காமல் தவித்த நிலையில், தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு போதுமான உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்களின் நிலை 93 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக உணவுத் திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

கொடுமை

கொடுமை

இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் உணவுப் பற்றாக்குறை, வேலை இன்மை போன்ற அவலங்கள் நிகழ்கின்றன. கொடுமையின் உச்சகட்டமாக, தற்போது ஆப்கன் மக்கள் தங்களின் உடல் உறுப்புகளையும், பெற்ற குழந்தைகளையும் விற்று, உணவு உண்ணும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். பசிக்கொடுமையால் ஆப்கன் மக்கள் தங்கள் வீடுகளிலுள்ள பொருள்களை விற்கத் தொடங்கினர்.

குழந்தைகள்

குழந்தைகள்

குழந்தைகளின் நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக ஐ.நா-வின் குழந்தைகள் பாதுகாப்புக்கான யூனிசெஃப் அமைப்பு அறிக்கை வெளியிட்டது. அதில், 50 லட்சம் ஆப்கன் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் சாவின் விளிம்பில் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.

 உடல் உறுப்புகள்

உடல் உறுப்புகள்

இந்த நிலையில், வறுமையைத் தாக்குப்பிடிக்க, ஆப்கானிஸ்தானின் 5 வயது சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் சிறுநீரகத்தை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உணவு உண்டுவருகின்றனர். இது தொடர்பான புகைப்படத்தை ஏ.எப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 'நான் என்னுடைய கிட்னியை விற்கவில்லை என்றால், என் மகளை விற்க நேரிடும்' என ஆப்கன் தந்தை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+