மீண்டும் மீண்டுமா! அமெரிக்காவுக்கு நெருக்கமாக வரும் சீன பலூன்.. அதிகரிக்கும் பதற்றம்.. பின்னணி

பலூன்களைவிட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதன் மூலம் வானிலையை கணிப்பதே எளிதாக இருக்கும் நிலையில் வானிலையை கணிக்க சீனா பலூனை பயன்படுத்தியதாக கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: அமெரிக்காவின் வான் எல்லையில் ஊடுருவிய சீன பலூனை அந்நாட்டு விமானப்படையினர் சுட்டு வீழ்த்திய நிலையில், தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளின் மேலே இரண்டாவது சீன பலூன் பறந்துகொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 4ம் தேதியன்று இரவு அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆய்வாளர்கள் வானத்தை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு வெள்ளையான ஒரு பொருள் மறைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஆராய்ந்த அவர்கள் இது ஒரு பலூன் என்பதை கண்டுபிடித்தனர். பலூன் குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா சார்பில் எந்த பலூனையும் அனுப்பவில்லையே என்று அவர்கள் மறுப்பு கூற பலூன் குறித்த சர்ச்சைகள் வெளிவர தொடங்கின.

பலூன் தொடர்பாக பென்டகன் விரிவான ஆய்வை நடத்தியது. அதில் பலூன் அமெரிக்க வான் எல்லையில் சுமார் ஒரு லட்சம் அடிக்கும் அதிகமான உயரத்தில் பறந்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது. நம்முடைய எல்லைக்குள் நமக்கு தெரியாமல் பலூனா? என அமெரிக்க விசாரணை நடத்த, பலூன் சீனாவுடையது என்பதும் தெரிய வந்தது. ஆனால் இந்த விவகாரம் குறித்து சீனா முதலில் வாய் திறக்கவில்லை. பின்னர் விஷயம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கவனத்திற்கு சென்றதையடுத்து சீனா இதனை ஒப்புக்கொண்டது.

விளக்கம்

விளக்கம்

இது குறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை, "பெயரிடப்படாத இந்த பலூன் முழுக்க முழுக்க வானிலை நோக்கத்திற்காகவே அனுப்பப்பட்டது. இந்த வகை பலூன்கள் தாங்களாகவே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதில் ஏற்பட்ட பழுது காரணமாக காற்றின் வேகத்தில் அமெரிக்காவுக்குள் நுழைந்திருக்கிறது" என்று விளக்கமளித்திருந்தது. ஆனால் இந்த விளக்கத்தை அமெரிக்கா ஏற்கவில்லை. காரணம் பலூன் அந்த சமயத்தில் மான்டனா மாகாணத்திற்கு மேலே பறந்துக்கொண்டிருந்தது. இம்மாகாணத்தில்தான் அமெரிக்காவின் ரகசிய ஆயுதங்கள் சோதனைகள் நடைபெறும். எனவே இந்த பலூன் மூலம் சீனா தங்களை உளவு பார்ப்பதாகவே அமெரிக்கா குற்றம்சாட்டியது.

நியாயம்

நியாயம்

அமெரிக்கா கூறியதிலும் நியாயம் இருப்பதாக வானியல் வல்லுநர்கள் விளக்கமளித்திருந்தனர். "பலூன்களை வானிலை ஆய்வுக்கு பயன்படுத்தி வந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதன் மூலம் வானிலையை கணிப்பது எளிதாகிவிட்டது. அப்படி இருக்கையில் பலூனை யார் பயன்படுத்துவார்கள்? அதுவும் சீனா போன்ற வளர்ந்த நாடு பலூனை வானிலையை கணிக்க பயன்படுத்துவதாக சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். இந்த பலூன்கள் ஒரு லட்சம் அடிக்கும் அதிகமான உயரத்தில் பறக்கும் திறன் கொண்டவையாகும்.

சந்தேகம்

சந்தேகம்


போர் விமானங்கள் கூட இவ்வளவு உயரத்தில் பறக்காது. அப்படி இருக்கையில், இந்த பலூன்களை கண்டுபிடிப்பது சிரமம். மட்டுமல்லாது இது ரேடாரிலும் சிக்காது. செயற்கைக்கோள் தொடர்ந்து பூமியை சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு இடத்தில் நிலையாக நிற்காது. ஆனால் பலூன்கள் ஒரே இடத்தில் மாதக்கணக்கில் நிற்கும். இந்த அம்சங்களே உளவு பார்க்க போதுமானது. பலூன்கள் வெறும் பிளாஸ்டிக் என்பதால் தயாரிப்பு செலவுகளும் குறைவுதான். எனவே சீனா, அமெரிக்காவை உளவு பார்க்கத்தான் இதனை அனுப்பி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என வானியல் நிபுணர்கள் கூறியிருந்தனர்.

உறுதி

உறுதி

இதில் இவ்வளவு விஷயங்கள் இருப்பினும், சீனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளது. உளவு குற்றச்சாட்டையும் மறுத்திருக்கிறது. இதற்கிடையில் அமெரிக்கா மீது பறந்துக்கொண்டிருந்த பலூன் மெல்ல நகர்ந்து அந்நாட்டின் கரோலினா பீச் அருகே வந்து சேர்ந்து கடல் நோக்கி நகர்ந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அமெரிக்க விமானப்படையினர் பலூனை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத சீனா, இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது. இச்சம்பவங்கள் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவின் இரண்டாவது பலூன் தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளின் மீது பறந்து வருகிறது.

வெனிசுலா

வெனிசுலா

என்னதான் அமெரிக்கா சீன பலூனை சுட்டு வீழ்த்தினாலும் எந்த லத்தீன் அமெரிக்க நாடுகளும் இரண்டாவது பலூனை சுட்டு வீழ்த்த முன்வரவில்லை. மாறாக அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்புதான் தெரிவித்துள்ளன. வெனிசுலா அரசு அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல மற்ற நாடுகளும் சீனாவுடன் நட்புடன் இருந்து வருகிறது. அப்படி இருக்கையில் இதனை சுட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று அமைதி காக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+