கதறும் வங்கதேசம்.. அமெரிக்காவை தொடர்ந்து சுவிட்சர்லாந்து கொடுத்த ஷாக்.. முகமது யூனுசுக்கு செம அடி
டாக்கா: வங்கதேசத்துக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியதை தொடர்ந்து இப்போது இன்னொரு நாடும் உதவி செய்ய முடியாது என்று அறிவித்துள்ளது. இதனால் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அவர் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் தலைமை ஆலோசகராக இருப்பவர் முகமது யூனுஸ்.

இவர் பொறுப்பேற்றது முதல் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நட்பாக இருந்தார். ஆனால் முகமது யூனுஸ் அப்படியில்லை. நம் நாட்டுடன் மோதி வருகிறார். நம்முடன் பகையுடன் செயல்படும் பாகிஸ்தான், துருக்கி, சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறார்.
வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் சேர்ந்து அவரது அரசு செயல்பட்டு வருகிறது. அந்த நாட்டின் பொருளாதார நெருக்கடி உள்ளது. உள்நாட்டு உற்பத்தி சதவீதம் குறைந்துள்ளது. இதனால் வங்கதேசம் பிற நாடுகளிடம் உதவி கோரியும் வருகிறது. இதற்கிடையே தான் வங்கதேச அரசுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் வந்துள்ளன. ஏற்கனவே வெளிநாடுகளுக்கு நிதியுதவி செய்யப்படாது என்று கூறி அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அதனை நிறுத்தினார். இதனால் வங்கதேசம் பாதிப்பை எதிர் கொண்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது சுவிட்சர்லாந்தும் வங்கதேசத்துக்கான நிதி உதவியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதாவது சுவிட்சர்லாந்தின் சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனம் (SDC or Swiss Agency for Development and Cooperation) நிதி உதவியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நிதி பற்றாக்குறை தான். அதாவது ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளுக்கு உதவும் வகையில் நாடாளுமன்ற ஒப்புதலுடன் சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கும்.
இந்த நிதியை வைத்து வெளிநாடுகளுக்கு சுவிஸ் அரசு உதவி செய்யும். கடந்த டிசம்பர் மாதம் கேட்கப்பட்ட நிதியை குறைந்த அளவில் மட்டுமே சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் வேறு வழியின்றி வங்கதேசத்துக்கு கைவிரித்துள்ளது இந்த சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனம். சுவிட்சர்லாந்து தற்போது வங்கதேசம் மட்டுமின்றி அல்பேனியா, சாம்பியா நாடுகளுக்கான நிதியையும் நிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்கா அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கடந்த 20ம் தேதி அவர் பதவியேற்றதுமே அமெரிக்காவில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்துவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். நிதி உதவிகளை தற்காலிகமாக 90 நாட்கள் நிறுத்துவதாக அறிவித்துள்ளார்
இப்படியான சூழலில் தான் அமெரிக்காவின் உதவியில் வங்கதேசத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID or United States Agency for International Development) சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications